இந்தியா முழுவதும் 7,432 பொது ஃபாஸ்ட் EV சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMC) FAME India Scheme II திட்டத்திழ் கீழ் மத்திய அரசு சுமார் 800 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கனரக தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
FAME திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம் range பயம் தான். அதாவது எப்போது பேட்டரி தீரும் என்ற அச்சம் மட்டுமே. இந்த அச்சத்திற்கு முக்கிய காரணம் இந்தியாவில் போதுமான EV சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாமல் இருப்பது தான்.
ஃபாஸ்ட் EV சார்ஜிங் நிலையங்கள்
இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா முழுவதும் 7,432 பொது ஃபாஸ்ட் EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க 800 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிடுவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 நிறுவனங்கள்
இந்தியன் ஆயில் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.560 கோடி அல்லது மொத்தத் தொகையில் 70 சதவீதத்தை அமைச்சகம் முதல்கட்ட தவணையாக அளிக்க உள்ளது.
560 கோடி ரூபாய்
இந்த தொகையை வைத்து 7,432 பொது ஃபாஸ்ட் EV சார்ஜிங் நிலையங்களுக்கான அப்ஸ்ட்ரீம் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும், இந்தியன் ஆயில் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்-களில் EV பொது சார்ஜிங் நிலையங்களின் சார்ஜிங் கருவிகளை பொருத்த பயன்படுத்தப்பட உள்ளது.
மார்ச் 2024
இந்த சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மார்ச் 2024 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியா முழுவதிலும் 6,586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.
பயன்பாடு
மேலும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்கள், 4-சக்கர வாகனங்கள், இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகள் ஆகியவற்றை சார்ஜ் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications