வாய்ப்பில்ல ராஜா.. மோடி அரசின் பதிலால் எலான் மஸ்க் சோகம், டெஸ்லாவுக்குப் பின்னடைவு..!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது கார் விற்பனையைத் துவங்க பல மாதங்களுக்கு முன்பு புதிதாக ஒரு உள்நாட்டு நிறுவனத்தை உருவாக்கியது. ஆனால் இதுநாள் வரையில் தனது விற்பனையைத் துவங்கவில்லை இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு விதிக்கும் வரி தான்.

எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டும் இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை வைத்தது. இதற்கு அரசிடம் இருந்து எதிர்பாராத பதில் கிடைத்துள்ளதால் எலான் மஸ்க் மட்டுமல்லாமல் இந்திய எலக்ட்ரிக் வாகன பிரியர்களும் சோகத்தில் உள்ளது.

டெஸ்லா

டெஸ்லா

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, கடந்த வாரம் மத்திய அரசிடமும், நித்தி அயோக் அமைப்பிடமும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் எனக் கடிதம் அனுப்பியிருந்தது.

 எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

இந்தியாவில் அதிக எலக்ட்ரிக் கார் இறக்குமதி செய்து பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனக் டெஸ்லா நிறுவனம் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இறக்குமதி

இறக்குமதி

மேலும் இக்கடிதத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரியைப் பெரிய அளவில் குறைப்பதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதைச் சார்ந்துள்ள வர்த்தகம் அதிகரித்து அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறி டெஸ்லா கோரிக்கை வைத்துள்ளது.

 சீனா அல்லது அமெரிக்கா

சீனா அல்லது அமெரிக்கா

இந்தியாவில் இந்த வருடம் விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம், சீனா அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தனது எலக்ட்ரிக் கார்களுக்கு இறக்குமதி வரியை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

 வரி விதிப்பு

வரி விதிப்பு

இந்தியாவில் தற்போது இறக்குமதி செய்யப்படும் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட கார்களின் விலை 40,000 டாலருக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 60 சதவீத வரியும், 40,000 டாலருக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

 பட்ஜெட் விலை கார்

பட்ஜெட் விலை கார்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் டெஸ்லா கார் பட்ஜெட் விலை கார் என்பதால் அதன் விலை கட்டாயம் 40,000 டாலருக்கு குறைவாகவே இருக்கும். இதன் படி தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பின் படி 60 சதவீத வரி விதிக்கப்படும். இந்த வரியை தான் டெஸ்லா குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

 உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

இந்தக் கடிதத்திற்கு இந்தியாவில் டெஸ்லா கார்களை உற்பத்தி செய்து விற்பனையும், ஏற்றுமதி செய்தால் கட்டாயம் இறக்குமதி வரியைக் குறைக்கப்படும் என அரசு தரப்பில் இருந்து சில அதிகாரிகள் டெஸ்லாவின் கோரிக்கைக்குப் பதில் அளித்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிலை மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

 அரசு பதில்

அரசு பதில்

இன்று அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க எந்தத் திட்டமும் இல்லை என டெஸ்லா கோரிக்கை வைத்து ஒரு வார தீவிர ஆலோசனைக்குப் பின்பு பதில் அளித்துள்ளது.

 பல நிறுவனம் கோரிக்கை

பல நிறுவனம் கோரிக்கை

டெஸ்லா மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஆடம்பர கார் விற்பனை செய்து வரும் பல நிறுவனங்கள் தங்களது ஹைப்பிரிட் கார்கள் மீதான வரியை குறைக்கவும், ஹூண்டாய், எம்ஜி, ஆகிய நிறுவனங்களும் கோரிக்கை வைத்துள்ளது.

 இந்திய ஆட்டோமொபைல் துறை

இந்திய ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்தக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பு அடைவது மட்டும் அல்லாமல் நாட்டின் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் குறையும்.

 கிரிஷன் பால் குர்ஜார்

கிரிஷன் பால் குர்ஜார்

இதைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரான கிரிஷன் பால் குர்ஜார் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை குறைக்க எந்தத் திட்டமும் மத்திய கனரகத் தொழிற்துறையிடம் இல்லை தெரிவித்துள்ளார். இந்தத் துறை தான் ஆட்டோமொபைல் துறைக்கான கொள்கையை வடிவமைப்புச் செய்கிறது.

 லக்ட்ரிக் வாகன பயன்பாடு

லக்ட்ரிக் வாகன பயன்பாடு

இதேவேளையில் மத்திய அமைச்சரான கிரிஷன் பால் குர்ஜார் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த உள்நாட்டு வரி விதிப்பு அளவை குறைக்கவும், அதிகளவிலான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவீட்டை அதிகரிக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகளவிலான வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்தியாவில் முதலில் விற்பனை துவங்குவதாகவும், அதன் பின்பு உற்பத்தியைத் துவங்குவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ் கூறினாலும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் எலான் மஸ்க், டெஸ்லா-வுக்கு மத்திய அரசின் பதில் பெரிய பின்னடைவு தான்.

 தானியங்கி கார்

தானியங்கி கார்

இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் தீவிரம் காட்டி வரும் எலான் மஸ்க் மறுபக்கம் டிரைவர் இல்லாத, ஸ்டியரீங் வீல் இல்லாத வாகனத்தை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

 செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

சமீபத்தில் நடந்த உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், கூடிய விரைவில் லெவல் 5 தானியங்கி கார்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் கார்களின் அடிப்படை வடிவத்தை வெளியிடுவதில் தான் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

 செயற்கை நுண்ணறிவு தினம்

செயற்கை நுண்ணறிவு தினம்

வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி டெஸ்லா நிறுவனம் பேட்டரி டே போலச் செயற்கை நுண்ணறிவு தினத்தை அறிவித்துள்ளது. இந்த முக்கியமான கூட்டத்தில் லெவல் 5 தானியங்கி கார்களுக்கான முதல் கட்ட திட்ட வடிவம் அல்லது மாதிரியை டெஸ்லா காட்ட அதிக வாய்ப்பு உள்ளது. இது மட்டும் நடந்தால் டெஸ்லா நிறுவனப் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+