இந்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க புதிய வருமான வரிச் சட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு தற்போது நடைமுறையில் இகுக்கும் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த புதிய சட்டம், வரலாற்றுச் சிறப்புமிக்க 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ளது.
கடந்த ஆறு தசாப்தங்களாக பல திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய வருமான வரி சட்டம் மிகவும் சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் மாறியுள்ளதாகவும், இதனைச் சரி செய்யும் வகையில், புதிய வருமான வரிச் சட்டத்தின் மூலம் வரி விதிப்பு முறையை எளிமையாக்கி, வரி செலுத்துவோருக்குத் தெளிவு மற்றும் இணக்கத்தை அதிகரிக்க மோடி 3.0 அரசு முயற்சிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப் 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் போது புதிய வருமான வரிச் சட்டத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தார். இந்த புது வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை அதாவது வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7-ம் தேதி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வருமான வரிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த முக்கியமான சட்டமசோதா எளிதாக அமைச்சரவையில் நிறைவேறும் என்ற நம்பிக்கையாக உள்ளதாக நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதிய வருமான வரிச் சட்டம் தற்போதைய சட்டத்தை விட மிகவும் சுருக்கமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய வருமான வரி சட்டம் 1961-ல் 298 பிரிவுகள் மற்றும் 23 அத்தியாயங்கள் கொண்டு உள்ளது. இதேபோல் 1961 சட்டத்தில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கையில் சுமார் 50% புதிய வருமான வரி சட்டத்தில் குறைக்கப்படும். இதன் மூலம் வரி செலுத்துவோர் மற்றும் வரி அதிகாரிகளின் நிர்வாக சுமையைக் குறைக்க அரசு முயற்சிக்கிறது.
இப்புதிய வருமான வரிச் சட்டம் 2025-26 நிதியாண்டு முதல் அமலுக்கு வரும். அதாவது, 2026-27 ஆண்டு மதிப்பீட்டு ஆண்டு முதல் புதிய சட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்கள் புதிய விதிகளுக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள போதுமான நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 60 வருடத்தில் பல்வேறு அரசுகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட திருத்தங்களால் 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருமான வரிச் சட்டம் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. இதனால், வரி செலுத்துவோருக்கும், வரி அதிகாரிகளுக்கும் இடையே அதிகப்படியான குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த சிக்கலான சூழலை மாற்றி, User Friendly அடிப்படையில் மாற்றம் செய்ய அரசு முயற்சிக்கிறது.


Click it and Unblock the Notifications