சென்னை: இந்தியா அரசு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் எனப் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருந்தாலும், ஐரோப்பிய நாடுகளுடனான ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும், அளவீடும் குறைவுதான். இதனாலேயே இந்திய நிறுவனங்கள் ஐரோப்பியச் சந்தைக்குள் நுழைவதில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால் தற்போது நிலவும் சர்வதேச வர்த்தக சூழ்நிலைகள் இந்தியாவுக்குச் சாதகமாக இகுக்கும் காரணத்தால், இந்திய அரசின் பல வருட முயற்சி தற்போது மாபெரும் வெற்று அடைந்துள்ளது. இந்தியா - ஐரோப்பிய நாடுகள் மத்தியிலான வர்த்தக உறவை மேம்படுத்த மிகவும் முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா அரசு, ஐரோப்பிய திறந்த வர்த்தக சங்கம் (EFTA) அமைப்புடன் சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் (FTA) ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய பகுதியில் இருக்கும் 4 முக்கிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கும் மத்தியிலானது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஐடி, ஒளி-ஒலிப்பதிவு (audio-visual) துறை, திறன் பெற்ற தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு போன்ற முக்கிய பிரிவுகளில் முதலீடுகளை மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா தற்போது கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி ஐஸ்லாந்து, Liechtenstein, நோர்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உடன் ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட பிறகு முதல் 10 ஆண்டுகளில் EFTA நாடுகளிடமிருந்து 50 பில்லியன் டாலர்களை முதலீடாகப் பெற இந்தியா இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்றே மேலும் 50 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கவும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
இந்த 100 பில்லியன் டாலர் முதலீட்டின் வாயிலாக இந்தியாவில் நேரடியாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது ஐஸ்லாந்து, Liechtenstein, நோர்வே, சுவிட்சர்லாந்து ஆகிய 4 நாடுகளிடம் மட்டும் 100 பில்லியன் டாலர் முதலீடும், 10 லட்சம் வேலைவாய்ப்புகளையும் ஈர்க்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
இந்தியாவும், EFTA அமைப்பும் 2008 ஜனவரி முதலே பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நீண்ட கால முயற்சிக்குப் பின்பு இந்த முக்கியமான நிகழ்வு நடந்துள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் இதற்கு முன்பு எப்போதும் நடந்ததில்லை என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் இது மிகவும் சமமான, நியாயமான, நேர்மையான ஒப்பந்தம் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய தொழில்துறைக்குச் சிறந்த தொழில்நுட்பங்களைப் பெறவும், இந்தியாவிற்கு இன்னோவேஷன் கொண்டு வரவும், நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) மூலம் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கவும் வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
இந்த முதல் கட்ட முதலீடுகள் அடுத்த நிலைக்கு செல்லும் போது 300 - 400 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதேபோல் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications