இந்திய ஸ்மார்ட்போன் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பெரிதும் சிறிதுமாக ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், சீனா நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பல பிரிவுகளில் மிகப்பெரிய ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடங்களாகவே இந்தியாவில் இயங்கி வரும் சீன நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகள் செய்வது கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அமலாக்க துறை உட்பட பல அரசு அமைப்புகள் இந்தியாவில் இயங்கி வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் செய்த ஆய்வில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் கொண்ட வங்கி கணக்குகளை முடக்கப்பட்டு உள்ளது, இந்த தொகையை திரும்ப பெற பல வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு முக்கியமான கண்டிஷன்களை வைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களை தங்களுடைய இந்தியா வர்த்தகத்தில் இந்திய நிறுவனங்களை பங்கு கூட்டாளராக சேர்த்துகொண்டு இயங்க வேண்டும் என்ன கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அதாவது இந்தியாவில் இயங்கி வரும் சியோமி, ஓப்போ, ரியல்மீ, விவோ ஆகியவை இந்தியாவில் தனது வர்த்தகத்தை தனியாக செய்ய முடியாது, இந்திய நிறுவனங்களின் கூட்டணி அடிப்படையில் தான் செய்ய முடியும், மத்திய அரசு இந்த கண்டிஷன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை, இதேபோல் இந்த விதிமுறை எப்போது வரும் எனவும் தெரியவில்லை.
இது மட்டும் அல்லாமல் மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் இந்திய வர்த்தகத்தில் hief executive officer, chief operating officer, chief financial officer மற்றும் chief technical officer பதவிகளில் இந்தியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் உள்நாட்டு உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்கள் கூட்டணியும், உதிரிபாகங்கள் அளவிலான உற்பத்தி இந்திய நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிலித்து.
மேலும் சீன நிறுவனகங்கள் இந்தியாவில் தனது டிஸ்ட்ரிபியூஷன்-ஐ இந்திய நிறுவனங்களை பயன்படுத்தவும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் வரி ஏய்ப்பை தடுக்க இந்திய அரசு விதிமுறைகள் உடன் வேகமாக இணங்கவும் அரசு தரப்பில் இருந்து Xiaomi, Oppo, Realme, Vivo நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications