மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. PM Mega Integrated Textile Regions and Apparel (PM MITRA) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த ஏழு ஜவுளிப் பூங்காக்கள் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் அமைக்கப்படும்.

PM மித்ரா திட்டம் 2021 அக்டோபர் மாதத்தில் 4,445 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திடம் 2023-24 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடாக சுமார் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி PM மித்ரா திட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் கொடுத்தார்.
PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் மூலம் ஜவுளித் துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கப்படும். இதன் வாயிலாக கோடிக்கணக்கான முதலீட்டை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். இத்திட்டம் மூலம் மேக் இன் இந்தியா வெற்றிப்பெறுவது மட்டும் அல்லாமல் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்டு என்ற நிலைக்கு செல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கும்.

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் அமைக்கப்படும் மாபெரும் ஜவுளிப் பூங்காக்களில் மூலம் இந்தியாவில் நேரடியாகவும், முறைமுகமாகவும் சுமார் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் கிட்டத்தட்ட 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ஏழு இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியைப் குறித்து ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா பேசுகையில், 13 மாநிலங்களில் இருந்து 18 முன்மொழிவுகளை பரிசீலித்து தனது வெளிப்படைத்தன்மையுடன் இடங்களைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications