Jammu and Kashmir: ஏலத்திற்கு வரும் லித்தியம் கனிமம்.. நாடாளுமன்றத்தில் அறிவிப்பு..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் கனிம இருப்பு ஏலம் விடப்படும் என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

லித்தியம் கனிமத் தொகுதியின் வெற்றிகரமான ஏலத்தைப் பொறுத்து எந்த அளவுக்கு மைனிங் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார், ஏலத்திற்கான காலக்கெடுவை ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

இந்திய எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மொத்தமாக மாற்றும் சக்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லித்தியம் கனிம இருப்புக்கு இருப்பதால், இப்பகுதி உற்பத்தி மற்றும் முதலீட்டை மிகவும் முக்கியமாக இந்திய அரசு மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் இதை உற்று நோக்கி வருகிறது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் ஊகிக்கப்பட்ட வளங்கள் (ஜி3) முதன்முறையாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. லித்தியம் என்பது இன்று உலகமே தேடி அலையும் ஒரு முக்கியக் கனிமம்.

 எலக்ட்ரிக் கார்கள்

எலக்ட்ரிக் கார்கள்

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில் அதன் பேட்டரி தயாரிப்பில் முக்கியக் கனிமம் லித்தியம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லித்தியம்-ஐ சுத்திகரிப்பு செய்து கிடைக்கும் லித்தியம் மூலம் பெரும் நிதியை திரட்டப்படுவது மட்டும் அல்லாமல் உலகிற்கே இந்தியாவில் இருந்து லித்தியம் பேட்டரியை தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு

இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு

இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு இதுவரையில் லித்தியம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடாத நிலையில் முதல் முறையாக அறிவித்துள்ளது. லித்தியம் சரங்கம், சுத்திகரிப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் சீனா பெரும் போட்டியை போட்டு வரும் நிலையில் இந்தியாவும் இதில் சேர்ந்துள்ளது.

51 கனிம தொகுதிகள்

51 கனிம தொகுதிகள்

2018-19 முதல் பிப்ரவரி 9, 2023 வரையிலான காலகட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் இந்த 51 கனிம தொகுதிகள் பட்டியலிடப்பட்டு உள்ளது. தங்கத்தைக் காட்டிலும் லித்தியம் கனிமம் கிடைத்தது மூலம் தொழிற்துறை வியப்பில் உள்ளது.

11 மாநிலங்கள்

11 மாநிலங்கள்

இந்த 51 கனிமத் தொகுதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் உள்ளது எனச் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கம்

தங்கம்

இதில் 5 தொகுதிகளில் தங்கம் உள்ளதாகவும் மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது. இதை தொடர்ந்து வெளியான தகவல்கள் படி ஒடிசாவின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓடிசா மாநிலத்தின் ஸ்டீல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரபுல்லா மல்லிக் அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம்

ஒடிசா மாநிலம்

ஒடிசா மாநிலத்தில் தியோகார், கியோஞ்சார் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களில் தங்கம் படிம இருப்பு இருப்பதை இந்திய சுரங்க மற்றும் புவியியல் ஆய்வு இயக்குநரகத்தின் (ஜிஎஸ்ஐ) ஆய்வுகள் உறுதி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+