இந்தியர்களைக் குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களைப் போலியான முதலீட்டுத் திட்டத்தை இயக்கி வருவது கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் இந்த இணையதளங்களைத் தடை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த 100 இணையதளங்களும் முதலீடு, அதிக லாபம் என்ற பெயரில் இந்திய மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கும் பணிகளைச் செய்து வருவதாகத் தெரிகிறது.
சீன நிறுவனத்தாலும், சீனாவுக்குத் தொடர்புடைய நபர்களால் நடத்தப்படும் நிதி மோசடிக்கு எதிரான மத்திய அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களைத் தடை செய்ய உள்ளது மத்திய அரசு.

மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் சீன இணையதளங்களை முடக்க வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக 250க்கும் அதிகமான சீன செயலிகள் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொபைல் ஆப் மூலம் கடன் கொடுத்து மக்களை மிரட்டி பணம் பறிப்பதில் துவங்கி, கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம், போலியான முதலீட்டுத் தளம் வரையில் பல போலியான முதலீட்டுத் தளத்திற்குப் பின்னால் ஒரு சீன நிறுவனமோ அல்லது ஒரு சீன நபரோ இருப்பது பல மோசடிகளில் அம்பலமானது.
முதலீடு என்ற பெயரில் மோசடி செய்யும் பல இணையத் தளங்கள், கடன் செயலிகள் என இந்திய மக்களின் பணத்தைப் பறிக்கும் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்கவும் இத்தகைய செயலிகள் இணையதளங்களை முடக்கவும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவது மட்டும் அல்லாமல், மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனப் பல வகையில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சீனா மோசடியாளர்களை ஓடுக்க மத்திய நிதியமைச்சகம், ஆர்பிஐ ஏற்கனவே பல நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக இது பதிவு செய்யப்படாத நிறுவனம், பதிவு செய்யப்பட்ட மொபைல் ஆப் ஆகியவற்றின் மூலம் நடக்கும் காரணத்தால் கட்டுப்படுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் போலி மோசடிகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களை முடக்க வலியுறுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications