இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராண்ட்பேன்ட் சேவை அளிக்கும் திட்டத்தை எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் முதலீட்டில் இயங்கும் ஒன்வெப் ஆகிய இரு நிறுவனங்கள் இந்த வருடத்தின் இறுதிக்குள் இச்சேவையை அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இது புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் திட்டம் என்பதால் மத்திய அரசு ஸ்பேஸ்காம் கொள்கை என்ற பெயரில் புதிதாக ஒரு விதிமுறைகள், கட்டுப்பாடுகளை LEO செயற்கைக்கோள் திட்டத்திற்கு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பிராண்ட்பேண்ட் சேவை
பொதுவாகப் பிராண்ட்பேண்ட் சேவை என்பது டெலிகாம் நிறுவனங்கள் கேபிள் இணைப்பு முலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அளிக்கப்படும். ஆனால் இந்த LEO செயற்கைக்கோள் திட்டம் செயற்கோள் மூலம் அளிக்கப்படும் பிராட்பேண்ட் சேவை.
செயற்கைக்கோள்
இந்தப் பிராட்பேண்ட் சேவை அளிக்கப் பூமி முழுவதும் அல்லது மாநிலம் அல்லது நாடு முழுவதையும் கவர் செய்யும் அளவிற்கான செயற்கைக்கோள்களை Low Earth Orbit-ல் வைத்து அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படும்.
நேரடியாக இண்டர்நெட் இணைப்பு
இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர் அதாவது மக்களுக்கு எவ்விதமான கேபிள் இணைப்பும், நெட்வொர்க் இணைப்பும் தேவையில்லை, விண்ணில் இருக்கும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இண்டர்நெட் இணைப்பைப் பெற முடியும்.
அதிவேக இண்டர்நெட்
இதேபோல் 24 மணிநேரமும் எவ்விதமான தொழில்நுட்ப கோளாறு இல்லாமல் அதிவேக இண்டர்நெட் சேவையை அனைவராலும் காடு, மலை என அனைத்து இடத்திலும் பெற முடியும். இத்தகைய சேவைக்காகவே தற்போது மத்திய அரசு ஸ்பேஸ்காம் கொள்கை வெளியிட உள்ளது.
விண்வெளி துறை
இதுக்குறித்து விண்வெளி துறை விரைவில் அனைத்து விதமான கணக்கீடுகள் மற்றும் நிர்வாக விதிமுறைகள், கண்காணிப்புக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உருவாக்கிய உடனே கொள்கைகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக டெலிகாம் துறை உயர் அதிகாரி ஆர். சாக்கியா தெரிவித்துள்ளார்.
டாடா டெலிசாட் கூட்டணி
எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவைக்குப் போட்டியாகவும், இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாகப் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ-வின் பிரண்ட்பேன்ட் சேவைகளுக்குப் போட்டியாக டாடா நிறுவனமும் இதேபோன்ற சேவையை அளிப்பதற்காகக் கனடா நாட்டின் டெலிசாட் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
100 சதவீத அன்னிய முதலீடு
செயற்கைக்கோள் மூலம் இண்டர்நெட் சேவை அளிக்கும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு 100 சதவீதம் அன்னிய முதலீடுகளை அட்டோமேட்டிங் ரூட்டில் அனுமதிக்கும் என்றும், இந்த அறிவிப்பு தான் ஸ்பேஸ்காம் கொள்கை தான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
விண்வெளி துறை
மேலும் இந்தச் சேவைக்கு டெலிகாம் துறை அல்லாமல் விண்வெளி துறை தான் உரிமம் வழங்குவது, சந்தை கட்டுப்பாட்டு ஆணையம், செயற்கைக்கோள் ஆப்ரேட்டர் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கைக்கோள் மற்றும் Satcom சேவை வழங்குவோரும் அதைத் தான் விரும்புகின்றனர். இதுவும் ஸ்பேஸ்காம் கொள்கையில் மிக முக்கியமானதாக உள்ளது
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications