அமெரிக்க நாடாளுமன்றத்தில் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பேசிய பேச்சு, உலக நாடுகளை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன, ஆயினும் பல நாடுகள் ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து தப்பிக்க அமெரிக்காவுக்கு ஏதுவாக வரி கொள்கைகளை மாற்றி வருகிறது. டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி ரெசிப்ரோக்கல் வரி விதிப்பதற்கு முன்பும் சரி பின்பும் சரி தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துக்கொள்ளும் முயற்சியில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஈத்தேன் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) ஆகியவற்றின் மீது இந்திய அரசு விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை நீக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரியை குறைக்கவும், அந்நாட்டு பொருட்கள் மீது விதிக்கப்படும் ஒட்டுமொத்த வரிகளின் சுமையை குறைக்கவும் மோடி தலைமையிலான இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிகிறது.

இந்த வரி குறைப்பு குறித்த இறுதி முடிவு மத்திய வர்த்தக மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளால் எடுக்கப்படும், ஆனால் இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் இந்த வர்த்தக அமைச்சகம் வெளியிடவில்லை. சரி இந்த வரியால் அதிகம் பலன் அடையப்போவது யார் தெரியுமா..?
உலகின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை இயக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் ஈத்தேன் இறக்குமதியின் முக்கிய வாடிக்கையாளராக உள்ளது. இதனால் ஈத்தேன் மீதான வரியை குறைத்தால் அதிகம் பலன் அடையப்போவது தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் தான். இதேவேளையில் மத்திய அரசு நிறுவனங்களும் அதிகப்படியாக LPG வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் இது பெரும் பகுதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இந்த ஈத்தேன் மற்றும் எல்பிஜி பொருட்களுக்கான வரிகளை ரத்து செய்யும் திட்டம் மூலம் அமெரிக்காவிலிருந்து எரிபொருள் கொள்முதலை அதிகரிக்க கூடும். ஏற்கனவே இந்தியா மத்திய கிழக்கு நாடுகளை விடுத்து ரஷ்யாவில் இருந்து அதிகப்படியான எரிபொருளை இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இந்தியாவுக்கான முக்கிய சப்ளையராக மாற உள்ளது.
இந்தியா அரசு தற்போது ஈத்தேன் மீது 2.5 சதவீத இறக்குமதி வரியை விதித்து வருகிறது. இதை வைத்து தான் பெட்ரோ கெமிக்கல், புரோபேன் மற்றும் பியூட்டேன் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்திய அரசின் தரவுகள் படி, 2023-24 நிதியாண்டில், இந்தியா 10.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 18.5 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜியை இறக்குமதி செய்துள்ளது, இதில் பெரும்பாலான இறக்குமதிகள் மத்திய கிழக்கிலிருந்து வந்தவை.
அமெரிக்காவிலிருந்து எரிபொருள் இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம், இந்தியா அதிக வரிகளைத் தவிர்க்கவும் முடியும். எனினும், இந்த திட்டம் குறித்து அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications