ஆறு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள வருமான வரி மசோதாவை மாற்றுவதற்காக லோக்சபாவில் பிப்ரவரி 13 அன்று நிதியமைச்சர் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா 2025-ஐ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு முறைமுக வரியை ஜிஎஸ்டி மூலம் மறுசீரமைப்பு செய்த நிலையில், இந்தியாவில் 1961 முதல் நடைமுறையில் இருக்கும் வருமான வரி மசோதாவை, பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கிய புதிய பதிப்பை சமர்ப்பிக்க முடிவு செய்து லோக்சபாவில் இருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளதாகவும் எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11, 2025, திங்கட்கிழமை அன்று, பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட குழு சமர்ப்பித்த பெரும்பாலான பரிந்துரைகளை சேர்த்து, தேவையான திருத்தங்கள் உடன் புதிய வருமான வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், வரி செலுத்துவோருக்கு தெளிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி மசோதாவை ஏன் திரும்ப பெற வேண்டும் என்றால், வருமான வரி சட்டத்தில் பல்வேறு பதிப்புகளால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், அனைத்து மாற்றங்களையும் ஒருங்கிணைத்து தெளிவான சட்ட திருத்தத்தை வழங்கவும் முடிவு செய்து திரும்ப பெறப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட இந்த புதிய மசோதா லோக்சபாவில் ஆலோசனைக்காக மீண்டும் முன்வைக்கப்படும் என்றும் தெரிகிறது.
வருமான வரி மசோதா 2025, 1961 சட்டத்தை மாற்றுவதற்காக பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இது பல்வேறு கருத்து வேறுபாடுகளை எதிர்கொண்டது. இதைத் தொடர்ந்து, அரசு இந்த மசோதாவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025-ஐ (Income Tax Bill, 2025) ஆராய்ந்த பாஜக உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றகுழு, 2025 ஆம் ஆண்டு ஆதாய வரி மசோதாவை ஆய்வு செய்து, முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
வருமான வரி
இந்த குழு, தனி நபர் வரி செலுத்துவோருக்கு TDS (Tax Deducted at Source) பணத்தை திரும்பப் பெறுவதற்கு, குறிப்பிட்ட காலக்கெடு (Due Date) கடந்த பிறகும் வரி விண்ணப்பம் (ITR) தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு அபராதம் விதிக்கப்படக் கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்த மாற்றம், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்யும் மக்களுக்கு தங்கள் பணத்தை எளிதாக திரும்ப பெற உதவி, நிதி ரீதியான நிவாரணத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.
தொண்டு அமைப்புகளுக்கு நிவாரணம்
அதேபோல், புனித மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக இயங்கும் அமைப்புகளுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த குழு மற்றொரு முக்கிய பரிந்துரையை முன்வைத்துள்ளது. பெயரிடப்படாத நன்கொடைகளுக்கு வரி விதிப்பில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைப்புகள் பெறும் தொகைகள் (receipts) மீது வரி விதிப்பதை எதிர்த்து, அவை வருமான வரி சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானவை என்று விளக்கப்பட்டுள்ளது. எனவே, NPOகளின் (Non-Profit Organizations) வருமானம் மட்டுமே வரிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று 'வருமானம்' என்ற சொல்லை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, இந்த அமைப்புகளுக்கு நிதி ரீதியாக பலனளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமையும்.
முன்பு, 2025 ஆம் ஆண்டு வருமான வரி மசோதாவில் பெயரிடப்படாத நன்கொடைகளுக்கு 30% வரி விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்ற குழுவின் புதிய பரிந்துரைகள் இதை மாற்றி, தொண்டு அமைப்புகளுக்கு நிதி ஆதரவை அதிகரிக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications