பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன் காரணமாகப் பெரும் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் பணிகளை வேகப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் முக்கியமான விஷயத்தை ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
மத்திய அரசுக்குச் சுமையாக இருக்கும் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை வேகப்படுத்தவும், அதிகப்படியான தொகையை இதன் மூலம் பெற வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு புதிய கட்டமைப்பை ரிசர்வ் வங்கியிடம் முன்வைத்துள்ளது.
பொதுத்துறை வங்கி விற்பனை
இதற்கு முன்பு பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் இத்துறையில் இருக்கும் மற்றொரு இந்திய வங்கி அல்லது இந்தியாவில் இயங்கும் நிறுவனத்திற்குத் தான் விற்பனை செய்ய முடியும்.
புதிய கட்டமைப்பு
ஆனால் தற்போது மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ள கட்டமைப்பு (FrameWork) மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி நிறுவனங்களும், வெளிநாட்டு சவ்ரின் வெல்த் பண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்க முடியும். இதற்கான விதி தளர்வுகள் குறித்துத் தான் தற்போது ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்
இந்த அனுமதியை ரிசர்வ் வங்கி அளிக்க முடியுமா என்பதற்கான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையைத் தற்போது மத்திய அரசு துவங்கியுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கும் நிலையில் பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், சோழமண்டலம் பைனான்ஸ் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளைக் கைப்பற்ற முடியும்.
இந்திய வங்கித் துறை
இந்தியாவில் நிலையான மற்றும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் முக்கியமான துறை என்றால் அது வங்கித் துறை தான். இந்தத் துறையில் தனியாருக்குப் பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய வங்கித்துறை சந்திக்கும்.
மத்திய அரசுக்குச் சுமை
அனைத்திற்கும் மேலாக மத்திய அரசுக்குச் சுமையாக இருக்கும் இந்தப் பொதுத்துறை வங்கிகளை அதிகத் தொகைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற காரணத்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு பற்றிய உங்கள் கருத்தை கமெண்ட் ஆகப் பதிவு செய்யுங்கள்.
தளர்வுகள் கட்டாயம்
மேலும் மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, அதேபோல் பொதுத்துறை வங்கிகளில் வளர்ந்து வரும் வாராக் கடனை சமாளிக்க வங்கித்துறையில் சில தளர்வுகள் கட்டாயம் தேவை என்பதையும் மறுக்க முடியாது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications