இந்தியா AI இம்பேக்ட் உச்சி மாநாடு 2026 மிகப்பெரிய அளவில் நடந்து வருவது மட்டும் அல்லாமல் உலகளவில் பல பகுதிகளில் இருந்து டெக் நிபுணர்களும், டெக் தலைவர்களும் டெல்லி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று சந்தித்துப் பேசினார். உலகத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆளுமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் முக்கிய தளமாக இந்த மாநாடு திகழ்கிறது.
மாநாட்டில் கலந்துகொள்ளவும், பிப்ரவரி 20 அன்று இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றவும் டெல்லி வந்திருந்த சுந்தர் பிச்சை, இந்தியா வந்தடைந்ததும் X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "இந்தியா AI IMPACT மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வழக்கம் போல் ஒரு அன்பான வரவேற்பு கிடைத்தது" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இம்மாநாடு, 110-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 30 சர்வதேச அமைப்புகளிலிருந்து டெக் துறையை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோட்டல், உணவகம் பிசியாக உள்ளது. ஹோட்டல்களில் ரூம் வாடகை 4-5 மடங்கு அதிகரித்துள்ளது.

அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் இந்த உச்ச மாநாட்டில் பங்கேற்கும் காரணத்தால் ஒட்டுமொத்தமாக இந்திய ஏஐ துறை வலுப்பெற்றுள்ளது. இந்த மாநாடு இந்திய ஏஐ துறை வளர்ச்சியின் முக்கிய படியாகவும், பெரிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இந்திய ஏஐ நிறுவனங்கள் தனது ப்ராடெக்ட்களையும், சேவைகளையும் உலக நாடுகளில் இருந்து வந்துள்ள டெக் நிபுணர்களுக்கு காட்டி வருகின்றனர்.
மேலும் பல நிறுவனங்கள் ஏஐ துறையில் திறன்வாய்ந்த வல்லுனர்களை பணியில் சேர்க்க ஒரு ஆட்சேர்ப்பு தளமாகவும் இந்த ஏஐ இம்பேக்ட் கூட்டத்தை பார்க்கிறது.
ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு செயற்கை நுண்ணறிவு சவால்களையும், மிகப்பெரிய வாய்ப்புகளையும் அளிப்பதாகக் கூறினார்.
மேலும், "செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் புதிய அலைகள் மற்றும் துறை சார்ந்த ஆட்டோமேஷன் உத்திகள் காரணமாக, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை 2030-க்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று AI சந்தை கணிப்புகள் காட்டுகின்றன," எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications