இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித் தளம் ஆரம்பம் முதல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தைக் குற்றம்சாட்டினார். இதனால் மக்கள் மத்தியில் இன்போசிஸ் மீதான நம்பிக்கை குறைந்தது.
ஏற்கனவே இன்போசிஸ் பணியாற்றிய சில முக்கிய இணையதளத்திலும் இதேபோன்ற பிரச்சனை இருந்த நிலையில், ஏன் மீண்டும் வருமான வரித் தளத்தைக் கட்டமைக்கும் திட்டத்தைக் கொடுத்து என மக்கள் அரசைக் கேள்வி எழுப்பினர்.
இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வருமான வரி தளம் உருவாக்கக் கொடுக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மக்கள் பணம் வீண் எனக் கருத்து டிவிட்டரில் வந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு புதிய வருமான வரித் தளத்திற்கு எவ்வளவு பணம் தொடுத்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு - இன்போசிஸ்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் அடிப்படையில் புதிய வருமான வரி தளத்திற்காக மட்டும் மத்திய அரசு இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரையில் 164.5 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வருமான வரித் தளம்
இன்போசிஸ் நிறுவனம் ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 திட்டத்தை ஓப்பன் டென்டர் வாயிலாகவே பெற்றது. இந்த ஒப்பந்தம் கைப்பற்றியதன் மூலம் இன்போசில் குறைந்த விலையில் அரசுக்கு சேவை அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பங்கஜ் சவுத்ரி
மேலும் இன்போசிஸ் மற்றும் மத்திய அரசுக்குமான நிதி பரிமாற்ற அளவீட்டுத் தகவல்களை நாடாளுமன்றத்தில் மாநில நிதியமைச்சரான பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். வெறும் 164.5 கோடி ரூபாய் தொகையில் தான் மொத்த ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 தளத்தை இன்போசிஸ் உருவாக்கியுள்ளதா என்றால் கட்டாயம் இல்லை.
ரூ.4,241 கோடி மதிப்பிலான திட்ட
மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 16, 2019ல் ஈபைலிங், Centralized Processing Centre 2.0, MSP-கான பேஅவுட், ஜிஎஸ்டி, வாடகை, போஸ்டேஜ் மற்றும் பிராஜெக்ட் மேனேஜ்மென்ட் செலவு என அனைத்திற்கும் சேர்ந்து அடுத்த 8.5 வருடத்திற்கு 4,241 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளித்தது.
ஈபைலிங் தளம்
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஜூன் 7ஆம் தேதி ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 திட்டத்தை மக்களின் பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது. ஆரம்பம் முதல் பல்வேறு பிரச்சனைகளை இத்தளத்தில் எதிர்கொண்டு வருகின்றனர்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications