இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு 2024ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்கு இப்போதே அடித்தளமிட்டு உள்ளது.
பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் இரண்டு முறை தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 2024 தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 3.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய திட்டத்தை மோடி அரசு கையில் எடுத்துள்ளது.
அடிப்படை வசதிகள்
இந்திய மக்களுக்கான அடிப்படை வசதிகளான சமையல் சிலிண்டர், கழிப்பறை, மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை அளித்துப் பெருமளவிலான வாக்குகளைப் பெற்று இரண்டு முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது தண்ணீர் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார் மோடி.
19.2 கோடி வீடுகளுக்குத் தண்ணீர்
இந்தியக் கிராமங்களில் இருக்கும் 19.2 கோடி வீடுகளுக்கும் பைப் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை அடுத்த 4 வருடத்திற்கு நிறைவேற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை மோடி தலைமையிலான அரசு நிர்ணயம் செய்துள்ளது. 19.2 கோடி வீடுகள் என்பது அமெரிக்காவில் இருக்கும் மொத்த வீடுகளை விடவும் மிகவும் அதிகமானது.
3.6 லட்சம் கோடி ரூபாய் திட்டம்
சுமார் 3.6 லட்சம் கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் இத்திட்டம் மூலம் இந்தியக் கிராமங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் பல கோடி மக்களின் அடிப்படை பிரச்சனையைக் களைய முடியும். இந்தியாவில் தற்போது வெறும் 7 கோடி இந்திய வீடுகளுக்கு மட்டுமே தண்ணீர் இணைப்பு உள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம்
இந்திய மக்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் socio-economic வளர்ச்சியில் பெரிய அளவில் பின்தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகும் எனக் குழாய் வாயிலான குடிநீர் விநியோகம் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தலைவர் பார்த் லால் அறிவித்துள்ளார்.
55 லிட்டர் குடிநீர்
இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நாள் ஒன்றுக்குக் குறைந்தது 55 லிட்டர் குடிநீர் அளிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications