பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் அவருடைய இந்த பயணத்தில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட முக்கியமான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெறக்கூடிய முதல் சந்திப்பு இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையிலான இந்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே குறிப்பிடத்தக்க பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது.

குறிப்பாக கடல்சார் கண்காணிப்புக்காக கூடுதலாக P-8I உளவு விமானங்களை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட போவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் கடல் எல்லை பகுதிகளில் சீனா தன்னுடைய கண்காணிப்பை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் மத்திய அரசு கடல் சார்ந்த பாதுகாப்பை வலுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 6 எண்ணிக்கையிலான P-8I உளவு விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட உள்ளது என சொல்லப்படுகிறது.
அமெரிக்க அரசு foreign military sales (FMS) என்ற திட்டத்தின் கீழ் மற்ற நாடுகளுக்கு பாதுகாப்புக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே இந்தியா P-8I உளவு விமானங்களை வாங்கியுள்ளது. இந்திய கடற்படை ஏற்கனவே 12 என்ற எண்ணிக்கையில் P-8I உளவு விமானங்களை கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான ரேடார்கள் மற்றும் அதிநவீன எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
போயிங் நிறுவனம் தயாரித்த இந்த விமானங்கள் 2009 மற்றும் 2016 ஆம் ஆண்டில் என இரண்டு முறை அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்தியாவால் வாங்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 3.2 பில்லியன் டாலர்கள் ஆகும். தற்போது இந்திய கடற்படை இந்த விமானங்களைக் கொண்டுதான் கடல் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
குறிப்பாக சீன கடற்படை கப்பல்கள் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு இவை முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் 2.42 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கூடுதலாக இந்த உலக விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா 2021 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது.
ஆனால் மத்திய அரசு அதற்காக குறிப்பிட்ட தொகை போதுமானதாக இல்லை என கூறி அமெரிக்க அரசு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. தற்போது அந்த ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்திடப்பட உள்ளது. இது தவிர சட்டவிரோத குடியேற்றம், ஹெச்1பி விசா விவகாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications