இந்திய வங்கித் துறை புதிய சாதனை படைத்துள்ளது, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகள் 2023-24 நிதியாண்டில் (FY24) ஒட்டுமொத்த நிகர லாபம் 39% அதிகரித்து ரூ.3.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (FY23) இந்த லாபம் ரூ.2.2 லட்சம் கோடியாக இருந்தது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி செய்த ட்வீட்-ல், கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கத் திருப்பமாக, இந்தியாவின் வங்கித் துறை நிகர லாபம் முதன்முறையாக ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போன் பேங்கிங் கொள்கையால் நமது வங்கிகள் நஷ்டத்திலும், அதிகப்படியான NPAகளிலும் தத்தளித்தன, ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகள் மூடப்பட்டன.
ஆனால் இப்போது இந்த நிலை மாறி, வங்கிகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவது மட்டும் அல்லாமல் ஏழைகள், விவசாயிகள் மற்றும் MSME களுக்கு கடன் கிடைப்பதை மேம்படுத்த உதவியுள்ளது என தங்களுடைய 10 வருட ஆட்சியில் இது பெரும் சாதனை என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட்டுக்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சாமி தனது ட்வீட்டில், கொடுக்கப்பட்ட கடன்கள் வருமானம் வாரியாக அளிக்கப்பட்டு உள்ளது என்று சொல்லும் போது தான் உண்மை சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு K வகை கடன் பாலிசி ஆகும், குறைந்த வருமானம் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பெரியவர்களின் சுகாதார செலவுகளுக்கு கடன் பெற போராடுகிறார்கள் என தெரிவித்தார்.

கடந்த 2 வருடத்தில் பதிவான நிகர லாப அளவீட்டைப் பார்க்கும் போது, பொதுத்துறை வங்கிகளின் பங்கு அளவு வியப்பு அளிக்கிறது. 2023-24 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 34% உயர்ந்து ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது.
தனியார்த் துறை வங்கிகளையும் பொறுத்தவரை, அவற்றின் நிகர லாபம் கடந்த ஆண்டின் ரூ.1.2 லட்சம் கோடியிலிருந்து 42% அதிகரித்து ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகளின் லாப இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது, ஆனால் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருப்பது குட்நியூஸ்.
முதல் மூன்று காலாண்டுகளில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த லாபத்தையும் விட வங்கிகளின் நிதி ஆண்டு லாபம் அதிகமாக உள்ளது. உதாரணமாக, கடந்த நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட ஐடி சேவை நிறுவனங்களின் நிகர லாபம் ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது.
இது வரையிலான காலகட்டத்தில் மிகவும் லாபகரமான துறையாக ஐடி சேவைத் துறை இருந்து வந்தது. இதை உடைத்து வங்கித்துறை மிகவும் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் தங்கள் கடன் நிலுவைகளை ஒழுங்குபடுத்தி வருமானத்தை அதிகரித்ததன் மூலம் தனியார்த் துறை வங்கிகளுடனான லாப இடைவெளியைக் குறைத்து வந்தன. உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
மேலும் பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய கணக்குகளுக்காகப் பல வங்கிகள் ஒருமுறை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்ததால், 2023-24 நிதியாண்டில் அவற்றின் நிகர லாபம் சற்று குறைந்துள்ளது. மேலும், கோ ஏர் நிறுவனத்திற்கு வழங்கிய கடனுக்கான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வளர்ச்சி இந்திய வங்கித் துறையின் வலிமையையும், பொருளாதாரத்தின் மீதான அதன் நேர்மறையான தாக்கத்தையும் காட்டுகிறது. அதே நேரத்தில், பொது மற்றும் தனியார் வங்கி பங்குகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்று வருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications