தியான்ஜின், சீனா: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கி இருக்கிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பின் மோடி சீனாவுக்கு சென்றிருக்கிறார்.
மோடியின் சீன பயணம்: டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் மோடியின் சீன பயணம் அமைந்துள்ளது. தனி விமானம் மூலம் சீனாவின் தியான்ஜின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சீனாவும் இந்தியாவும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன. பிரதமரின் சீனப்பயணமும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடும் அதற்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

மோடி - ஸீ ஜின்பிங் சந்திப்பு: இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் , எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பரவலாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பெரிய பொறுப்பு: இந்த சந்திப்பின்போது உரையாற்றிய சீன அதிபர் ஸீ ஜின் பிங் சீனாவும் இந்தியாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள், மேலும் சர்வதேச பிராந்தியத்தின் முக்கிய உறுப்பினர்கள் என குறிப்பிட்டார். இருநாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது, ஒற்றுமை மற்றும் புத்துணர்ச்சியை ஊக்குவிப்பது , மனித சமூகத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது போன்ற வரலாற்று பொறுப்பை நாம் இருவரும் சுமக்கிறோம் என அப்போது அவர் தெரிவித்தார்.

யானை டிராகன் ஒற்றுமை: நாம் சிறந்த நட்புறவுகளை கொண்ட அண்டை நாடுகளாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும், யானையும் டிராகனும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது முக்கியம் என தெரிவித்தார். இந்தியா சீனா இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் என்ற மைல் கல்லை எட்டி இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய ஜின் பிங், நீண்ட கால அடிப்படையில் இந்த உறவை புத்துணர்ச்சியோடு கொண்டு செல்வதற்காக இரு நாடுகளும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.உலகம் முழுவதும் அமைதியையும் வளத்தையும் கொண்டு வர வேண்டிய பொறுப்பு நம் இரு நாடுகளுக்கும் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
மோடி பேச்சு:முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சீனாவுடன் உடனான உறவை அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என தெரிவித்தார். 2.8 மில்லியன் மக்களின் நலன் இந்தியா மற்றும் சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பில் தான் இருக்கிறது என குறிப்பிட்ட மோடி, இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் அமைதியும் நிலைத்தன்மையும் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
டிரம்புக்கு வலுவான மெசேஜ்: அமெரிக்க அரசின் வர்த்தக போருக்கு மத்தியில் சீன அதிபரும் இந்திய பிரதமரும் சந்தித்து பேசியுள்ளனர். இது அமெரிக்காவுக்கு எதிராக இரு நாடுகளும் இணைவதை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. உலகமே இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பையும் பேச்சையும் உற்றுநோக்கியது. ஒற்றுமையாக செயல்பட போகிறோம் என்பதை தான் இருதரப்புமே டிரம்புக்கு வலுவாக எடுத்துரைத்துள்ளது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications