இந்தியாவில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது, கடந்த சில மாதமாக உணவு பணவீக்கம் குறைந்த காரணத்தால் ரீடைல் பணவீக்கம் வேமாக குறைந்து நாட்டின் வர்த்தக நிலையை மேம்படுத்தியது. இந்த நிலையில் ஜூலை மாதம் துவக்கம் முதல் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான உணவு பொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதற்கிடையில் அரிசி விலை புதிய உச்சத்தை எட்டும் என்ற சந்தை ஆய்வுகள் வந்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து டிவிட்டரில் ModiFlation என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள வேளையில் ModiFlation ஹேஷ்டேக் கீழ் அனல்பறக்கும் கருத்துக்களை மக்களும், எதிர்கட்சிகளும் பதிவிட்டு வருகின்றனர்.

நார்த் வெஸ்ட் டெல்லி காங்கிரஸ்-ன் டிவிட்டர் கணக்கில் கடந்த 3 மாதத்தில் மக்கள் பயன்படுத்தும் முக்கிய உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை பட்டியலிட்டு காட்டியுள்ளனர். துவரம் பருப்பு 110ல் இருந்து 160 ஆக உயர்வு. தனியா தூள் 186ல் இருந்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது என படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு செல்வது எவ்வளவு விசித்திரமானது.
அதிக பணவீக்கத்தால் இந்திய மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர், ஆனால் பிரதமர் மோடி வைரங்களை பரிசளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து ஈஸ்ட் பெங்களூர் காங்கிரஸ் தனது டிவிட்டர் கணக்கில் பிப்ரவரியில் நுகர்வோர் விலைக் பணவீக்கம் 6.44 சதவீதமாக உயர்ந்து.
2014 LPG ₹410
2023 எல்பிஜி ₹1102+
2014 பெட்ரோல் ₹70
2023 பெட்ரோல் ₹100+
2014 டீசல் ₹55
2023 டீசல் ₹100+
2014 CNG ₹38
2023 CNG ₹87+ என விலை உயர்வை பட்டியலிட்டு உள்ளது.

இன்னும் எத்தனை நாள் உங்கள் தோல்வியை பாகிஸ்தான், காங்கிரஸ்-ஐ காரணம் காட்ட போகிறீர்கள் என Faiz_INC என்பவர் தெரிவித்துள்ளார்.
8 வருடத்தில் 400 ரூபாயில் இருந்து 1100 ரூபாய் வரையிலான பயணம், இந்தியாவில் சிலிண்டர் மட்டும் விலை உயரவில்லை என யோகேஷ்மீனா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

சுவாதி வைத்தியா என்பவர் வாக்குறுதி கொடுத்ததோ Achche Din-க்கு, ஆனால் கிடைத்தது அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை,
சமத்துவமின்மை. சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என #Modiflation உடன் ட்வீட் செய்துள்ளார்.

பாவிககா கபூர் என்பவர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது அதாவது 2011 ஆம் ஆண்டு நவம்பர் 03 தேதி பணவீக்கம் குறித்தும், விலைவாசி உயர்வால் மக்கள் வாடுவதை குறித்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ததை ட்வீட் செய்துள்ளார்.

Anomalous monkey என்பவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-ஐ டேக் செய்து, நீங்கள் வீட்டில் தக்காளி சாப்பிடுவீங்களா..? நீங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டீர்கள் என தெரியும். என பதிவிட்டு உள்ளார்.

More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications