பெங்களூர்: மோசமான உள் கட்டமைப்பு காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூரை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படலாம் என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . நகரின் பெரும்பாலான பகுதிகளின் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதனால் அலுவலகத்திற்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள முன்னாள் இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய் கர்நாடக அரசு மழைநீர் தேங்குவதை தடுக்கவும் போக்குவரத்து பிரச்சனையை தீர்க்கவும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , துணை முதலமைச்சர் டி கே சிவகுமார், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோரை டேக் செய்து அவர் தன்னுடைய கவலையை பதிவு செய்துள்ளார். அதில் பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை, வடிகால் வசதி செய்யப்படவில்லை மற்றும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது.
இது இந்த பகுதியில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூரை விடுத்து வேறு நகரங்களில் தொழில் தொடங்குவதற்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.
அரசின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார் . பெங்களூரையும் பெங்களூரில் இருக்கும் நிறுவனங்களையும் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் சித்தராமையா இந்த மழைநீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களிடையே இப்படி ஒரு கோபத்தை நான் கண்டதில்லை எனக் கூறியுள்ளார்.
பல்வேறு பெங்களூர்வாசிகளும் மோகன்தாஸ் பாய்யின் இந்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். பெங்களூரின் அவுட்டர் ரிங் சாலையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என கூறியுள்ளனர். அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என பலரும் தங்களுடைய கோபத்தை பதிவு செய்துள்ளனர்.
நிறுவனங்கள் பெங்களூரில் இருந்து வெளியேறினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என சிலர் சாடியுள்ளனர். பெங்களூரில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் வீடியோ மற்றும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளின் புகைப்படங்கள் எக்ஸ் பக்கங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications