ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஏமாற்றுகிறதா..? மோகன்தாஸ் பாய் கேள்விக்கு என்ன பதில்..?

பெங்களூரு: இந்தியாவில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தவே இல்லை என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய் சாடியுள்ளார்.

தற்போது ஆரின் கேபிடல் என்ற நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வரக்கூடிய மோகன்தாஸ் பாய் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புபவர். அந்த வகையில் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்தவே இல்லை என எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஏமாற்றுகிறதா..? மோகன்தாஸ் பாய் கேள்விக்கு என்ன பதில்..?

2011 ஆம் ஆண்டில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஃபிரஷர்கள் ஆண்டுக்கு 3.25 லட்சம் ரூபாயை ஊதியமாக பெற்றனர். 13 ஆண்டுகள் கடந்துவிட்டது, தற்போதும் இதே ஃபிரஷ்ஷர் வேலைக்கு நிறுவனங்கள் வழங்க கூடிய வேலை சம்பளம் 3.75 லட்சம் ரூபாய் ஆகும்.

நிறுவனங்கள் இதனை எப்படி நியாயப்படுத்துகின்றன என மோகன்தாஸ் பாய் வினவியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு, தற்போது ஒரு தலைமை செயல அதிகாரியின் சம்பளம் எவ்வளவு என்றும் விளாசியுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன், இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத லாபத்தை நடப்பாண்டில் பெற்றுள்ளன, ஆனால் அதற்கு ஏற்ப ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவே இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.

அதே போன்ற ஒரு கேள்வியை தான் மோகன்தாஸ் பாய்யும் எழுப்பியுள்ளார். இந்தியாவில் உயர் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளம் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது ஆனால் ஃபிரஷர் அளவிலும் ஜூனியர் அளவிலும் இருப்பவர்களுக்கான ஊதியம் பெரிய மாற்றத்தை காணவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது 50 முதல் 60% உயர்ந்திருக்கிறது. ஆனால் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்களின் சம்பளம் 20% கூட உயரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் . அதிலும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலைமை இன்னும் மோசம் என தெரிவித்துள்ளார்.

தலைமை செயல் அதிகாரிகளுக்கு மட்டும் நிறுவனத்தின் செயல் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இதில் ஆரம்ப நிலை ஊழியர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை ஏன் நிறுவனங்கள் பார்க்க மறுக்கின்றன என காட்டமாக கூறியுள்ளார். இந்தியாவில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த இடைவெளியை சரி செய்ய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+