டாடா குழுமத்தின் எமரீட்டிஸ் தலைவரும் சர்வதேச வணிக ஐகானுமான ரத்தன் டாடா கடந்த அக்டோபரில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவருக்கு நேரடி வாரிசுகள் யாரும் கிடையாது. இதனால் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்தது. .
சொத்து மதிப்பு
ஆனால், தனது மறைவுக்கு பின் தனது சொத்துக்கள் யார் யாருக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து ரத்தன் டாடா தெளிவாக உயில் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். அந்த உயிலில் 2022 பிப்ரவரி 23 என தேதியிடப்பட்டுள்ளது எனவே ரத்தன் டாடா அவர் இறப்பதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே உயில் எழுதியுள்ளார் உயில் உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.3,800 கோடி என கூறப்படுகிறது.

ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு விட்டு சென்றுள்ளார். ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீனா ஜெஜீபாய், டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியரும் அவரது நெருங்கிய கூட்டாளியுமான மோகினி எம் தத்தா, ரத்தன் டாடாவின் ஒரே சகோதரரான 82 வயதான ஜிம்மி நேவல் டாடா, டாடாவின் நெருங்கிய தோழி மெஹ்லி மிஸ்திரி உள்பட சுமார் 24 பேர் டாடாவின் உயிலின் பயனாளிகளாக உள்ளனர் என தகவல்.
சட்ட நடைமுறைகள்
ஆனால் அவர்களுக்கு ரத்தன் டாடாவின் சொத்துக்கள் உடனடியாக கிடைக்காது. சில சட்ட நடைமுறைகள் நிறைவு செய்த பிறகே உயிலின்படி சொத்து அனைவருக்கும் கிடைக்கும். ரத்தன் டாடா தனது உயிலை நிறைவேற்றும் பொறுப்பை வழக்கறிஞர் டேரியல் கம்பாடா, அவரது நெருங்கிய தோழி மெஹ்லி மிஸ்திரி மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரின் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார்.
இதனையடுத்து கடந்த மார்ச் 27ம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் உயிலை நிறைவேற்றுபவர்கள் டாடாவின் உயிலை புரோபேட் செய்ய மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிமன்றம் அண்மையில் ஒரு பொது அறிவிப்பை வெளியிடவும், சம்மதம் தெரிவிக்காத சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து ஆட்சேபனைகளை பெறவும் அவர்களுக்கு உத்தரவிட்டது.
டாடாவின் நண்பர்
டாடா உயிலால் பலன் பெறும் பயனாளிகளில், ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரான மோகினி எம் தத்தா ஆரம்பத்தில், உயிரை நிறைவேற்றுபவர்களுடன் உடன்படவில்லை. கணேஷ் சிலை போன்ற சில விலைமதிப்பற்ற பொருட்களை அவர் ஆய்வு செய்ய விரும்பியதாகவும், ஆனால் கொலாபாவில் உள்ள டாடாவின் ஹலேகாய் இல்லத்துக்குள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று தகவல்.
உயிலை மறுத்தால், எந்தவொரு பயனாளியும் அனைத்து உரிமைகளையும் இழப்பார் என்ற பிரிவு இருந்ததால், தற்போது டாடாவின் உயிலின் விதிமுறைகளுக்கு மோகினி மோகன் தத்தா சம்மதம் தெரிவித்துள்ளார். மோகினி மோகன் தத்தா ஒப்புதல் அளித்துள்ளதால், உயிலை நிறைவேற்றுபவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து புரோபேட் பெறுவதற்கான செயல்முறையை வேகப்படுத்தியுள்ளது.
60 ஆண்டு கால நட்பு
மோகினி மோகன் தத்தாவுக்கும், ரத்தன் டாடாவுக்கும் இடையே 60 ஆண்டுகளுக்கும் மேலான உறவு இருந்தது. அவர்கள் இருவரும் முதலில் ஜாம்ஷெட்பூரில் டீலர் ஹாஸ்டலில் சந்தித்தனர். அப்போது தத்தாவுக்கு 13 வயது, ரத்தன் டாடாவுக்கு 25 வயது. தத்தா மும்பைக்கு இடம் பெயர்ந்து கொலாபாவில் உள்ள டாடாவின் பக்தவார் இல்லத்தில் வசித்து வந்தார். டாடா தான் என்னை உண்மையிலேயே கட்டியெழுப்பினார் என்று தத்தா பலமுறை தெரிவித்துள்ளார்.
மோகினி மோகன் தத்தா தனது தொழில்முறை வாழ்க்கையை தாஜ் நிறுவனத்தின் பயண அலுவலகத்தில் தொடங்கினார். பின்னர் 1986ல் டாடா இண்டஸ்ட்ரீஸின் நிதியுதவி மற்றும் ஆதரவுடன் ஸ்டாலியன் டிராவல்ஸ் சர்வீசஸை தொடங்கினார். 2006ல் ஸ்டாலியன் நிறுவனம் தாஜ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டிட்ராவல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் இயக்குனரானார். அவர் தாஜ் நிறுவனத்தில் அதிக வருமானம் ஈட்டும் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார்.
தாமஸ் குக்
2015ல் பயண சேவைகள் நிறுவனம் டாடா கேபிட்டலுக்கு மாற்றப்பட்டது. பின் 2017ல் தாமஸ் குக் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. 2019 வரை தனது இயக்குனர் பதவியை தக்க வைத்துக் கொண்டார், அப்போது வணிகம் தாமஸ் குக்குடன் இணைக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் உயிலின்படி, மோகினி மோகன் தத்தாவுக்கு டாடாவுக்கு சொந்தமான ரூ.588 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications