ஈரான் போர் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளியாகி நம்மை அதிர்ச்சடைய வைக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு ராணுவ நடவடிக்கை எடுத்தன. இந்த ராணுவ தாக்குதலில் அவர்கள் முதலில் குறி வைத்தது ஈரானின் உச்சபட்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி தான்.
ஈரான் நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தையும் ராணுவத்தையும் வழிநடத்தக் கூடிய ஒரு நபராகவும் அயத்துல்லா அலி கமேனி இருந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டது ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து யார் ஈரானின் தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்ற கேள்விகள் இருந்தன. இந்த சூழலில் தான் கமேனியின் குடும்பத்தின்ர் அனைவரும் இறந்துவிட்ட நிலையில் உயிருடன் இருந்த அவருடைய ஒரே மகனான 56 வயதான மொஜ்தபா கமேனி ஈரான் நாட்டின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் இவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு முறை கூட அவர் பொதுவெளியில் தென்படவே இல்லை. அவர் சார்ந்த வீடியோக்கள் கூட எதுவும் வெளியாகவில்லை. இதற்கு இடையே ஈரான் நாட்டு அரசு ஊடகம் போரில் காயமடைந்தவர் என கூறி மொஜ்தபா கமேனி தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தது. இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இது தீவிரமான காயங்களா என்பது குறித்து அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியே வராமலேயே இருந்தது. இதற்கிடையே அவர் இறந்து விட்டதாக சிலர் கூறினர் , சிலர் அவர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவித்தனர். இந்த சூழலில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியின் படி மொஜ்தபா கமேனி அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் படுகாயம் அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தன்னுடைய முகம் சிதைந்த நிலையில் இருப்பதாகவும் கால்களில் படுகாயம் அடைந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. கமேனி இருந்த கட்டடத்தின் மீது வான்வெளி தாக்குதல் நடந்த சமயத்தில் மொஜ்தபா கமேனியும் உடன் இருந்திருக்கிறார். இந்த தாக்குதலின் போது முகம் மற்றும் கால்களில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவரோடு தொடர்புடைய மூன்று பேர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பிடுகிறது.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடைய முகம் சிதைக்கப்பட்டதோடு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி சுட்டிக்காட்டுகிறது. அவர் தற்போது காயமடைந்த நிலையில் இருந்தாலும் அரசாங்கத்தை நடத்தும் முடிவுகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் என்றும் செய்தி குறிப்பிடுகிறது.
போர் குறித்த ஆலோசனையை நடத்துவது முக்கிய விஷயங்களில் முடிவெடுப்பது குறிப்பாக ஈரான் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்டவற்றிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என அந்த செய்தி குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications