மொனாகோ: உலகிலேயே அளவில் சிறிய நாடாக இருந்தாலும் குடிமக்கள் வைத்திருக்கும் சொத்தின் அடிப்படையில் பெரிய நாடாக இருக்கிறது மொனாகோ. ஐரோப்பிய நாடான மொனாகோ சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. இங்கே உள்ள குடிமக்களில் மூன்றில் ஒருவர் கோடீஸ்வரராக இருக்கின்றனர்.
பிரான்ஸுடன் எல்லையை பகிரும் இந்த நாட்டிற்கு பெரிய வருவாய் ஆதாரமே சுற்றுலா தான். மேலும் இங்கே வாழும் மக்கள் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை.

வருமான வரி இல்லை, மிக குறைந்த கார்ப்பரேட் வரி ஆகியவை காரணமாக இந்நாட்டு அரசுக்கு வரி மூலம் வருவாய் கிடைப்பதில்லை. வரிகள் இல்லை என்பதாலேயே பெரும்பாலான உலக பணக்காரர்களின் விருப்பமான நாடாக மொனாகோ இருக்கிறது.
மொனாகோ 40,000 மக்கள் தொகை கொண்டது நாட்டின் மொத்த பரப்பே 510 ஏக்கர் தான். பிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் இடையே அமைந்துள்ளது.பொதுவாக இதனை கோடீஸ்வரர்களின் விளையாட்டு மைதானம் (Billionaire's Playground) என்றே அழைக்கின்றனர். மொனாகோவில் சொகுசு கப்பல்கள் மற்றும் கேசினோக்களை நாம் பரவலாக காணலாம்.
இந்நாட்டு மக்களில் மூன்றில் ஒருவர் சுமார் 8 கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். புகழ்பெற்ற டென்னீஸ் வீரர் நோவக் ஜோகோவிச், ஃபார்முலா ஒன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், ஆகியோர் மொனாகோவை சேர்ந்தவர்கள்.
மொனாகோவை பொறுத்தவரை ரியல் எஸ்டேட் சந்தை என்பது அதிக மதிப்பு கொண்டது. உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட சொத்துகள் இங்கே இருக்கின்றன. நாட்டின் ஜிடிபியில் 7.8 சதவிகிதம் ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கிறது. கட்டுமான பணிகள் மூலம் 9.1 சதவிகித ஜிடிபி கிடைக்கிறது. இந்த நாட்டு குடிமக்களின் சராசரி ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய் ஆகும்.
சிறிய நாடு என்றாலும் 10 நகரங்களை உள்ளடக்கியது. மொனாகோவில் வசிக்கும் 40,000 பேரில் 10,000 பேர் மட்டுமே இந்த நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள்.மற்றவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த பெரும் பணக்காரர்கள். மொனாகோவின் அதிகாரப்பூர்வ மொழி பிரெஞ்சு.
Story written by: Devika


Click it and Unblock the Notifications