ஏடிஎம் மெஷினில் பணம் வரவில்லை.. ஆனால் SMS வந்துவிட்டதா? பணத்தை திரும்ப பெறுவது எப்படி?

இன்றெல்லாம் எப்பேர்பட்ட காரியமாக இருந்தாலும் கையில் பணமாக வைத்திருப்பதற்கு பதிலாக ஜிபே செய்து கொள்ளலாம் அல்லது ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்ளலாம் என்று சிலர் அசால்டாக இருக்கின்றனர். அப்படி அவசரத்திற்கு போய் ஏடிஎம் வாசலில் நிற்கும் போது தான் எதிர்பாராத விதமாக சில சோதனைகள் நடக்கும். கார்டை மெஷினுக்குள் போட்டுவிட்டு பின் நம்பரை வழங்கிவிட்டு, பணம் வெளியே வருவதற்காக காத்திருப்போம். அப்போது மிஷினில் இருந்து பணம் வராது. ஆனால் மொபைலில் மட்டும் பணம் டெபிடட் என்ற மெசேஜ் வந்துவிடும். இது போன்ற சூழல் ஒரு சிலருக்கு நிகழ்ந்திருக்கும்.

மெசேஜை பார்த்தவுடன் அவ்வளவுதான்.. சிலருக்கு தலையே சுற்றி விடும். பணம் வெளியில் வராமல் மெசேஜ் மட்டும் வந்தால் என்ன செய்வது? இதை எப்படி திரும்பப் பெறுவது? அதற்கான பதிலை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்திய ரிசர்வ் வங்கி இது போன்ற சூழ்நிலைகளை கையாளும் வகையில் சில விதிகளை வகுத்துள்ளது. ஏடிஎம் மெஷின் கோளாறால் பணம் வெளியில் வராமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக வங்கிக்கு செல்லலாம். அங்கு நடந்ததைக் கூறி கோரிக்கை வைக்கலாம். உங்களுடைய கோரிக்கையை ஏற்று வங்கி ஏழு வேலை நாட்களுக்குள் நீங்கள் ஏடிஎம் மிஷினில் எவ்வளவு பணம் எடுக்க நினைத்தீர்களோ? அந்த தொகையை மீண்டும் உங்கள் கணக்கில் வரவு வைத்துவிடும்.

 ஏடிஎம் மெஷினில் பணம் வரவில்லை.. ஆனால் SMS வந்துவிட்டதா? பணத்தை திரும்ப பெறுவது எப்படி?

அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்?: ஏடிஎம் மிஷினில் பணம் சிக்கிக் கொள்வது சில காரணங்களால் இருக்கலாம். அதிலும் குறிப்பாக சர்வர் எரர் ஏற்பட்டால் பணம் வெளியில் வராமல் மிஷின் உள்ளேயே மாட்டிக்கொள்ளும். இப்படி நடந்தால் பலரும் பதற்றம் அடைந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் பதற வேண்டாம். இது போன்ற சூழ்நிலைகளில் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய கணக்கிலேயே பணம் மீண்டும் ரீ-கிரெடிட் செய்யப்படும். எனவே 24 மணி நேரம் செல்லும் வரை உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்டை கண்காணித்துக் கொள்ளுங்கள்.

ஏடிஎம் ரசீதை பத்திரப்படுத்துங்கள்: ஒருவேளை பணம் வராமல் ஏடிஎம் மெஷினில் இருந்து ரசீது வந்தால் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். தூக்கி எறிந்து விடாதீர்கள். இந்த சூழ்நிலையில் ஏடிஎம் ரசீது மிக மிக முக்கியம். ஒருவேளை மெஷினில் ரசீது வரவில்லை என்றால் மெசேஜை டெலிட் செய்ய வேண்டாம். உங்களுக்கு வங்கியில் இருந்து அனுப்பப்படும் மெசேஜில் ட்ரான்ஸ்சாக்சன் ஐடி மற்றும் ஏடிஎம் ஐடி இருக்கும். நாம் வங்கிக்கு சென்று நடந்ததை கூறி புகார் செய்யும் போது இது போன்ற விபரங்கள் கண்டிப்பாக தேவைப்படும்.

எப்படி புகார் அளிப்பது?: ஒருவேளை 24 மணி நேரத்தை கடந்தும் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை என்றால் நீங்கள் வங்கியின் கஸ்டமர் கேர் நம்பரை தொடர்பு கொள்ளலாம். எந்த தேதியில் பணம் எடுக்க முயற்சி செய்தீர்கள்?, எந்த நேரத்தில் ATM சென்றீர்கள்? எங்கு உள்ள ஏடிஎம்-ஐ பயன்படுத்துனீர்கள்?, எவ்வளவு தொகையை எடுக்க முயற்சி செய்தீர்கள் என்ற அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். நீங்கள் புகாரை பதிவு செய்த பின் அவர்கள் ரெஃபரன்ஸ் நம்பரை குறித்து வைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் புகார் அளித்ததற்கான நம்பர் இது தான். இதன் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டால் சரி. அப்படி இல்லை என்றால் நேரடியாக கிளைக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் நடந்ததை கூறி எழுத்துப்பூர்வமாக ஒரு புகாரை கொடுக்க வேண்டும்.பின்னர் அவர்கள் தரும் அக்னாலேஜ்மென்ட் ரசீதை பத்திரமாக வாங்கி வைக்க வேண்டும். நீங்கள் வழங்கும் விபரங்கள் உண்மையானதா என்பதை ஊழியர்கள் சரிபார்த்து விட்டு, அதிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் உங்களுடைய பணம் அக்கவுண்டில் வரவு வைப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+