IRCTC பெயரில் மோசடி.. 5 லட்சம் அபேஸ்..!

IRCTC தளத்தில் டிக்கெட் புக் செய்வது எந்த அளவுக்கு கடினமோ, அதே அளவுக்கு டிக்கெட் புக் செய்த பின்பு அதை கேன்சல் செய்து ரீபண்ட் பெறுவதும் கடினம். இப்படி ஜானுகேஷ் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் புக் செய்த ரயில் 4 மணிநேரம் தாமதமாகிய காரணத்தால் டிக்கெட்டுக்கான பணத்தை ரீபண்ட் தொகை பெறுவதற்கு முயன்ற ஜானுகேஷ்-ன் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது.

IRCTC தளத்தை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாகவும், பாடமாகவும் அமைந்துள்ளது. IRCTC தளத்தில் ரீபண்ட் பெறும் போது எப்படி 5 லட்சம் ரூபாய் திருடப்பட்டது, வாங்க பார்ப்போம்.

IRCTC பெயரில் மோசடி.. 5 லட்சம் அபேஸ்..!

ஜானுகேஷ் என்பவர் தனது டிவிட்டர் கணக்கில் செய்த பதிவின் படி IRCTC புக் செய்த ரயில் 4 மணிநேரம் தாமதமாகிய காரணத்தால் டிக்கெட்டுக்கான பணத்தை ரீபண்ட் தொகை பெறுவதற்கு முயற்சி செய்த போது IRCTC கஸ்டமர் கேர் நம்பர் என அவர் கால் செய்த எண்ணில் பேசியவர், லிங்க் ஓன்றை கொடுத்து இதில் புகார் அளிக்கும் பசி ஜானுகேஷ்-யிடம் தெரிவித்துள்ளார்.

IRCTC கஸ்டமர் கேர் என்று போலியாக செயல்படுபவர்கள் இந்த இணைப்பை அனுப்பியுள்ளனர், இது தெரியாமல் ஜானுகேஷ் லிங்க்-ஐ கிளிக் செய்த அடுத்த சில நொடியில் போன் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்பு OTP கேட்கப்படாமலேயே பணம் பறிபோயுள்ளது. இந்த லிங்க் மோசடி மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் அளவிலான தொகை திருடப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து ஜானுகேஷ் தான் வங்கி கணக்கு வைத்திருந்த ஐசிஐசிஐ வங்கி டிவிட்டரில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் டேக் செய்து உதவி கோரினார். இதற்கு ரயில்வே சேவா அமைப்பு டிவிட்டரில் IRCTC மற்றும் அதன் ஊழியர்கள் பயனரிடம் தனிப்பட்ட விவரங்களை எப்போதும் கேட்பதில்லை. சில மோசடி செய்பவர்கள் சமூக ஊடக தளங்களில் தங்கள் கேள்வியை எழுப்பிய IRCTC பயனரை குறிவைக்கிறார்கள்.

IRCTC பெயரில் மோசடி.. 5 லட்சம் அபேஸ்..!

ஐஆர்சிடிசியில் பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை முழுவதுமாக தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுவதில் மனித தலையீடு இருக்காது என தெரிவித்தது. இது மட்டும் அல்லாமல் cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும் அறிவுரை கூறப்பட்டது. ஐசிஐசிஐ வங்கி விபரங்களை கேட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜானுகேஷ் கொடுத்த புகாரில் போன் ஹேக் செய்யப்பட்ட உடன் பல ஓடிபி-கள் எனக்கு வந்தது. இதனால் உடனே போன்ஐ ஆப் செய்துவிட்டு அனைத்து வங்கி கணக்கையும் முடிவிட்டேன், இதற்கிடையில் ஹேக்கர் நெட் பேங்கிங்-ல் நுழைந்து அவருடைய கணக்கை Payee ஆக சேர்த்து 3 லட்சம் பண பரிமாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளார், ஆனால் முடங்கிவிட்டது. இதற்கிடையில் கிரெடிட் கார்டு வாயிலாக 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+