இந்தியா இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய தொழில்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் புதிய முயற்சிகளை தொடங்குகிறார்கள். இந்த நிலையில், பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், சமூக பொறுப்பும் முக்கியம் என்னும் ஒரு பெரிய விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்துக் கொண்டிருக்கிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோரின் கருத்துக்களால் இந்த விவாதம் நடைபெறுகிறது
சமீபத்தில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்வில் பியூஷ் கோயல் முக்கியமான கேள்விகளை எழுப்பினார். "இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் விநியோகம், டெலிவரி சேவைகள், சிப்ஸ், ஐஸ்கிரீம் தயாரிப்பு போன்ற குறுகிய தொழில்களில் மட்டும் சிக்கிக்கொள்வதா? அல்லது உலகை மாற்றக்கூடிய பெரிய தொழில்நுட்பங்களை உருவாக்கப்போகிறோமா?" என்ற கேள்வி தான் விவாதத்தை தூண்டியது.

அவர் மேலும் , "நாம் டெலிவரி பாய்ஸ், டெலிவரி கேர்ள்ஸ் ஆகவே இருக்க விரும்புகிறோமா? நாம் சிறிய கடைதான் நடத்துகிறோம் என்று பெருமை கொள்வோமா? இல்லையா பெரிய சவால்களை எதிர்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை செய்யப் போகிறோமா?" என்று கேள்வி எழுப்பினார். இதன் மூலம் அவர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சமூகத்தின் நன்மைக்காக தொழில்நுட்ப ரீதியான பெரிய கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த கருத்துக்கு பதிலாக, ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் கணக்கில் ஒரு முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது,"பணம் சிலரிடம் மட்டுமே குவிந்துவிட்டால், நிறைய பேரிடம் எதுவும் இல்லாமல் போனால் சமூகத்தில் என்ன நடக்கும்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் ஐந்து முக்கியமான விடைகளை வழங்கியுள்ளார். முதலாவது, பணக்காரர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி சமூக வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இரண்டாவது, நன்கொடைகள் அளித்து மறைமுகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றுள்ளார். மூன்றாவது, அரசாங்கம் அதிக வரிகளை வசூலித்து, அந்தப் பணத்தை சமூக நலனுக்காக மறுபகிர்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். நான்காவது, மக்கள் கிளர்ச்சி செய்யவோ அல்லது கலகம் செய்யவோ கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதையும் ஐந்தாவது, சமூக பிரிவினை மற்றும் வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் அவற்றில் பல பெரும்பாலும் உணவுப் பொருட்கள், டெலிவரி சேவைகள், ஈ-காமர்ஸ் போன்ற துறைகளில் மட்டுமே உள்ளன. உலக அளவில் Google, Apple, Microsoft போன்ற நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி உலகத்தை மாற்றியுள்ளனர். ஆனால் இந்திய ஸ்டார்ட் அப்புகள் பெரும்பாலும் நுகர்வோர் சேவைகளில் மட்டும் தங்களை சுமக்கின்றன.
இதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். முதலீட்டாளர்களின் அழுத்தம், விரைவான லாப நோக்கம், பங்கு சந்தையின் எதிர்பார்ப்பு ஆகியவை இதற்குப் பிரதான காரணங்களாக இருக்கலாம். அதோடு, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையான போதிய ஆதரவு இல்லாமை மற்றும் பங்கு முதலீட்டாளர்களின் தனிப்பட்ட லாப விருப்பம் போன்றவை பணம் சிலரிடம் மட்டுமே குவிவதற்கு வழிவகுக்கின்றன. ஆனால் ஸ்ரீதர் வேம்புவின் முக்கியமான எச்சரிக்கை என்னவென்றால், இது நீண்ட காலத்திற்கு சமூகத்தில் வருமான சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி பணக்காரர்களின் பொறுப்புடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. பணம் சம்பாதிப்பது முக்கியம் தான் ஆனால் அது சமுதாய நலனுக்காக செலவழிக்கப்பட வேண்டியதும் முக்கியம். வேலை வாய்ப்பு உருவாக்கம் என்பது சமூக சமத்துவத்தை ஏற்படுத்தும் முதன்மையான வழி. அந்த வகையில் ஸ்ரீதர் வேம்புவின் கருத்து சமூகத்தில் நல்ல மாற்றத்திற்கான முக்கியமான விழிப்புணர்வாக பார்க்கப்படுகிறது.
பியூஷ் கோயல் மற்றும் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கள் இந்திய ஸ்டார்ட் அப் உலகத்திற்கு நல்ல பாடமாக இருக்கிறது. தொழில்நுட்ப புது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டமிட வேண்டும். கிராமப்புற வளர்ச்சி மற்றும் குறைந்த வருமான மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், இயற்கை எரிசக்தி போன்ற துறைகளில் பங்கு பெற வேண்டும்
இந்த விவாதம் இந்திய ஸ்டார்ட் அப் உலகத்திற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கலாம். பணம் சம்பாதிப்பது முன்னேற்றத்தின் ஒரு பகுதி தான். ஆனால் பணத்தின் உண்மையான பயன்பாடு சமுதாய நலனுக்காக செலவழிக்கப்படுவதே. இந்தியா வளர்ச்சி பெறவேண்டும் என்றால் தொழில்துறை மற்றும் அரசு இரண்டும் இணைந்து சமூக சமத்துவத்தை ஏற்படுத்த வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இது போன்ற சிந்தனை மிக முக்கியம். பணக்காரர்கள் வேலை வாய்ப்பு உருவாக்கும் போது தான் சமூகத்தில் நிலையான வளர்ச்சி ஏற்படும். பணத்தில் பணம் சம்பாதிப்பது மட்டும் முன்னேற்றம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications