சென்னை; இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, பணப் பரிமாற்றத்தில் உங்களுக்கு போலி ரூபாய் நோட்டு கிடைத்து என்றால், அது எங்கிருந்து கிடைத்தது என்பது நினைவில் இல்லை என்றால், வங்கி அல்லது காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 489A பிரிவின் கீழ், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பெரிய அளவில் பணத்தைக் கையாளாதவர்களுக்கு போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். வழக்கமாக தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத்தும்போதுதான் அது கள்ளநோட்டு என்பதே தெரியவரும். அதிர்ஷஅடவசமாக கள்ளநோட்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. கரன்ஸி நோட்டில் உள்ள சில குறியீடுகளை கண்டுபிடித்துவிட்டால் அது கள்ள நோட்டா அல்லது அசலா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் ஒரு கள்ளநோட்டு வந்துவிட்டால் பதற்றப்பட வேண்டாம். இதுபற்றி வங்கி அதிகாரிகளிடமோ அல்லது போலீஸாரிடமோ தெரிவித்தார் போதும்.
கள்ள நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற வாசகத்தின் மீது கை விரல்களால் தேய்த்துப் பாருங்கள். போலி நோட்டில் அந்த வாசகம் மேடாக இருக்கும். நல்ல நோட்டில் அப்படி இருக்காது. காந்தியடிகள் படத்துக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வாசகத்துக்கும் இடையே உள்ள எழுத்துகளை தேய்த்து பார்த்தால் இதே வித்தியாசத்தை உணரலாம். நல்ல நோட்டின் பகுதி ஸ்மூத்தாக இருக்கும்.
கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டால் ஆயுள்தண்டனையோ அல்லது பத்தாண்டுகள் சிறைவாசமோ அளிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களால் கள்ளநோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். வெளிநாடுகளில் எல்லாம் ஏடிஎம் இயந்திரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வார்கள். இதனால் புதிய வகை கள்ளநோட்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்த முடியாது.
கடந்த 2020-21 ஆம் ஆண்டு கள்ளநோட்டுகள் எண்ணிக்கை 10.7 சதவீதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 500 ரூபாய் கள்ளநோட்டு 102 சதவீதத்துக்கு மேல் புழக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.
வங்கி அல்லது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்துகூட கள்ளநோட்டு கிடைக்கலாம். இதுபற்றி அமெரிக்காவில் பல புகார்கள் எழுந்துள்ளன. சமயங்களில் இதுபோன்று நடந்து விடும்.
கள்ளநோட்டை வங்கி கேஷியர் பெற்றபின்னர் அதை கண்டறிந்து விட்டால் அந்த நோட்டை தந்தவர் முன்னரே அதை கேஷியர் கிழித்துப் போட்டுவிடுவார். அது போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்படும். போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்துவர்.
இந்திய ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிடும்போது அந்த நோட்டுகளில் சில பாதுகாப்பு அம்சங்களை மறைவாக வைத்திருப்பர். இதை அல்ட்ரா வயலெட் கதிரில் காண்பித்தால் காட்டிக் கொடுத்து விடும்.
கள்ளநோட்டுகளில் உள்ள மை மசமசவென்று இருக்கும். நல்ல நோட்டில் கச்சிதமாக இருக்கும்.
ஒவ்வொரு நோட்டுக்கும் தனித்தனியாக எண்கள் வழங்கப்பட்டிருக்கும். சீரியல் எண்கள் தவறாகவோ அல்லது திரும்பத்திரும்பவோ அச்சிடப்பட்டிருந்தால் அது கள்ளநோட்டாகும்.
கள்ளநோட்டின் பக்கங்களைத் தடவிப் பார்த்தால் அதில் மேடுகளை உணர முடியும். நல்ல நோட்டுகள் ஸ்மூத்தாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications