ஒவ்வொருவருமே தங்களுடைய வாழ்க்கையில் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். என்னதான் கடினமாக உழைத்தாலும் சில நேரங்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது. உங்களுக்கும் இதே போல பிரச்சனை ஏற்பட்டால், வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதன் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டு பணவரவுக்கான வழிகள் பிறக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கும் சில பொருட்கள் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஓடாத வாட்ச்: இன்றைய ஃபேஷன் உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப புது புது பொருட்களும் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் ரிஸ்ட் வாட்ச்களை அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள், புதிய வாட்ச்-களை அணியும் ஆசையில் பழைய வாட்ச்-ஐ அலமாரியிலோ அல்லது டிராயரிலோ வைத்து அப்படியே மறந்து விடுவார்கள்.

இதன் காரணமாக பேட்டரி தீர்ந்து காலப்போக்கில் வாட்ச் ஓடுவது நின்றுவிடும். சுவர் கடிகாரங்களுக்கும் இதே நிலைதான். வாஸ்து சாஸ்திரத்தின் படி வாட்ச் அல்லது கடிகாரங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் வைக்கக் கூடாது. இது முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பதுடன், பணம் கிடைப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
துருப்பிடித்த இரும்பு: ஜோதிடத்தில் இரும்பு சனிபகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இரும்பு துருப்பிடித்து இருந்தால் அதை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இதனால் மன உளைச்சல் ஏற்படுவதோடு, தொழிலில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படுமாம். வேலை மற்றும் வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டு பணம் பெறுவதற்கான பாதை அடைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
வீட்டின் மேற்கூரையில் இருக்கும் குப்பைகள்: சிலர் வீட்டை நன்றாக சுத்தம் செய்வார்கள் ஆனால் மேற்கூரையில் குப்பைகள் கிடக்கும். உதாரணமாக மர துண்டுகள், இரும்பு, பேப்பர், பாலித்தீன், சாக்குகள் போன்றவை பல ஆண்டுகளாக சிலர் வீட்டின் மேற்கூரையில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதுவும் வாஸ்து தோஷத்திற்கு ஒரு பெரிய காரணமாக கருதப்படுகிறது. வீட்டின் கூரையில் கிடக்கும் குப்பைகளால் பணவரவு தடைப்படும்.
இறந்த உறவினரின் ஆடைகள்: இதுவும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணமாகும். இறந்த உறவினரின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. ஜோதிடத்தின்படி இறந்த உறவினரின் உடைகளை ஏழை அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும். இறந்த உறவினர்களின் பழைய ஆடைகளை வீட்டில் வைத்திருப்பது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
தன்னீர் சொட்டும் குழாய்: சில நேரங்களில் வீட்டில் உள்ள குழாயிலிருந்து தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கும். பெரும்பாலான மக்கள் தங்களுடைய பிசி வாழ்க்கையில் இதை பொருட்படுத்தாமல் மறந்து விடுவார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள ஒரு குழாய் மூடி இருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால் அது செல்வத்தை கரைக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் இது போன்ற குழாய்கள் இருப்பது நிதி இழப்பை ஏற்படுத்தும், மேலும் வருமானம் வருவதைக் குறைக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications