இந்தியாவில் சமீபத்திய காலமாக முதலீடுகள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு மிக அதிகளவில் அதிகரித்துள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், 5,215 கோடி ரூபாய் முதலீடானது கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இது தொடர்ந்து 8வது மாதமாக தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்துள்ளதாக AMFI தகவல்கள் கூறுகின்றன.
ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட்
எனினும் செப்டம்பர் மாதத்தில் நிகர முதலீடானது 8,677 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சந்தையானது ஆல் டைம் உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், புராபிட் புக்கிங் செய்த நிலையில் குறைந்து இருக்கலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் 36,656 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 28,671 கோடி ரூபாயாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த ஃபண்டுகளில் முதலீடு அதிகம்
இதற்கிடையில் செப்டம்பர் மாத இறுதியில் 37.41 லட்சம் கோடி ரூபாயாக இருந்த AUM ஆனது, அக்டோபர் மாதத்தில் 38.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் ELSS தவிர, மற்ற பண்டுகளில் முதலீடுகள் அதிகரித்தன. குறிப்பாக துறை சார்ந்த, தீமெட்டிக் ஃபண்டுகள், பிளெக்ஸி ஃபண்டுகள், லார்ஜ் கேப் ஃபண்டுகள், ஃபோகஸ் மற்றும் லார்ஜ், மிட் கேப் ஃபண்டுகள் என அனைத்தும் நல்ல ஏற்றத்தினைக் கண்டன.
எஸ் ஐ பி முதலீடு
குறிப்பாக எஸ் ஐ பி முதலீடானது கடந்த அக்டோபர் மாதத்தில் 10,518 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் 2021 மாதத்தில் 10,351 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எஸ் ஐ பியில் மொத்தம் 4.64 கோடி ரூபாய் முதலீடாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4.48 கோடி ரூபாயாக இருந்தது.
Array
ஃபண்ட்ஸ் ஆப் ஃபண்ட்ஸ் நிகர விகிதம் அக்டோபர் மாதத்தில் 1,513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஃபண்டில் 410 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே டெப்ட் ஃபண்டுகளில் நிகர வரவாக 12,984 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 63,910 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications