ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்வது நல்லதா? மாதாந்திர முதலீடு செய்வது நல்லதா? சிறந்த வழி என்ன..?

நீங்கள் ஒரு திட்டத்தில் பணம் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்றால், பொதுவாக ஒரு கேள்வி மனதில் எழும். ஒரு பெரிய தொகையை ஒரே முறை முதலீடு செய்தால் நல்லதா.? இல்லை சிறிய தொகையை மாந்தோறும் முதலீடு செய்வது நல்லதா.? உதாரணமாக, உங்கள் கையில் ரூ.5 லட்சம் இருக்கிறது என்றால், அதை ஒரே நேரத்தில் முதலீடு செய்ய வேண்டுமா..? அல்லது மாதந்தோறும் ரூ.5,000 வீதம் முதலீடு செய்ய வேண்டுமா..? இந்த இரண்டு முறைகளுக்கும் பல நன்மைகளும், குறைகளும் உள்ளன. எந்த வழி உங்களுக்கு சரியானது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

SIP என்றால் என்ன..?: SIP என்பது நீங்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் திட்டம் ஆகும். இதை நீங்கள் மிகவும் எளிதாகத் தொடங்கலாம். நீங்கள் தொடர்ந்து சிறிய தொகைகளை முதலீடு செய்வதால், சந்தை உயர்வு, குறைவு போன்ற மாற்றங்களை எளிதில் சமாளிக்க முடியும். மேலும், மாத வருமானம் பெறுவோர், இத்திட்டத்தை சுலபமாக பின்பற்ற முடியும்.

ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்வது நல்லதா? மாதாந்திர முதலீடு செய்வது நல்லதா? சிறந்த வழி என்ன..?

மொத்த முதலீடு என்றால் என்ன..?:மொத்த முதலீடு என்பது நீங்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வது ஆகும். ஆனால் சந்தையின் நிலையை கவனித்து, விலைகள் குறைவாக இருக்கும் போது முதலீடு செய்தால் நல்லது. சந்தை உயர்ந்திருக்கும்போது முதலீடு செய்தால், அது நஷ்டம் அடையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், சரியான நேரத்தை தேர்வு செய்து, உங்கள் பணத்தை முதலீடு செய்வது நல்லது.

SIP நன்மைகள் :நீங்கள் மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வதால், இது நல்ல பழக்கமாக மாறும். பங்குச் சந்தை குறையும் போது நீங்கள் அதிக யூனிட்கள் வாங்குகிறீர்கள்; சந்தை உயர்ந்தால் குறைவாக வாங்குகிறீர்கள். இதையே 'ரூபாய் காஸ்ட் அவரேஜிங்' என அழைக்கப்படுகிறது. எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பமும், சந்தையை கணிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல், நீண்ட கால வளர்ச்சிக்கான ஒரு சீரான திட்டத்தை பின்பற்ற முடியும். மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு, அதில் இருந்து ஒரு சிறிய பகுதியைத் தவிர்த்து முதலீடு செய்வது எளிமையானது.

SIP குறைபாடுகள் : மாதாந்திர முதலீடு (SIP) முறையில் பல நன்மைகள் இருந்தாலும், சில குறைபாடுகளும் உள்ளன. SIP மூலமாகப் பெரிய அளவிலான லாபங்களை அடைய அதிக காலம் ஆகும். இதில் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் முழுத்தொகை முதலீடு செய்யாமல், சிறு சிறு தொகைகளாக மட்டுமே முதலீடு செய்வதால், முழுமையான பலன் மெதுவாகவே தொடங்கும்.

மொத்த முதலீட்டின் நன்மைகள் : நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகையும் முதலீடு செய்யப்பட்ட அந்த நாளில் இருந்தே வளரத் துவங்குகிறது. இது, காலப்போக்கில் பெரிய மதிப்பெற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முதலீட்டுக்குப் பிறகு பங்குச் சந்தை அல்லது நிதி சந்தைகள் உயர்ந்தால், SIP-யை விட அதிக வருமானத்தை நீங்கள் பெற வாய்ப்பு அதிகம். உங்களிடம் ஒரு நேரத்தில் பயன்படுத்தாத பணம் இருந்தால், அதை நீண்டகால முதலீட்டுக்கு பயன்படுத்த இது சிறந்த வாய்ப்பு.

மொத்த தொகை முதலீட்டின் குறைபாடுகள் : முதலீட்டைத் தொடர்ந்து சந்தை வீழ்ந்தால், உங்கள் முழுத்தொகையுமே அதனுடன் கீழே சென்றுவிடும். இதனால், உங்களுக்கு பெரிய இழப்புகள் ஏற்படலாம். குறிப்பாக திடீரென பணம் தேவைப்படும் சூழலில் நீங்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். சந்தையின் ஏற்றத் தாழ்வுகள் உங்களை மனதளவில் பதற்றத்திற்கு உள்ளாக்கக் கூடியவராக இருந்தால், மொத்த தொகை முதலீடு உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கலாம். இது குறுகிய கால லாபங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற முறை கிடையாது. மொத்த தொகையை முதலீடு செய்யும் முன், சந்தை நிலைகள், தனிப்பட்ட நிதிநிலை மற்றும் பொறுமை முக்கியமாக கருதப்பட வேண்டும். மொத்த தொகை முதலீடு அல்லது மாதாந்திர முதலீட்டில் எது சிறந்தது என்றால், உங்கள் பணநிலை, ஆபத்துகள் தாங்கும் மனப்பான்மை மற்றும் சந்தை நிலைமை ஆகியவை அடிப்படையில் முதலீட்டு முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

SIP ஏன் சிறந்தது..?: சந்தை நிலைகள் கீழே போகும்போதோ அல்லது தொடர்ச்சியாக குறையும் சூழ்நிலைகளில், SIP முதலீடு சிறந்ததாக இருக்கும். காரணம், இதில் நீங்கள் மாதந்தோறும் சிறு தொகையையே முதலீடு செய்வதால், சந்தையின் ஏற்றத் தாழ்வுகளை சமநிலைப்படுத்த முடிகிறது. உதாரணத்திற்கு, "2020 ஜனவரியில் ரூ.5,00,000 தொகையை ஒரே முறையாக முதலீடு செய்திருந்தால், கொரோனா தாக்கம் காரணமாக சந்தை கடுமையாக வீழ்ந்தபோது உங்கள் முதலீடு பெரிய அளவில் இழப்பை சந்தித்திருக்கும். ஆனால், அதே மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தால், சந்தை குறையும் போது அதிக யூனிட்கள் வாங்கப்பட்டிருக்கும். சந்தை பின்னர் மேல் சென்றதும், உங்கள் முதலீடு உறுதியாக மீண்டும் லாபம் ஈட்டியிருக்கும்.

கவனிக்க வேண்டியவை : ஒரே முறையில் முதலீடு செய்யலாமா? அல்லது மாதந்தோறும் முதலீடு செய்யலாமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்களிடம் முதலீட்டு தொகை முழுமையாக இருக்கிறதா? அல்லது மாதந்தோறும் சம்பளம் பெற்று வருகிறீர்களா? தற்போது பங்கு சந்தை உயர்வில் உள்ளதா, தாழ்வில் உள்ளதா, அல்லது மாறி மாறி செல்கிறதா? முதலீட்டுக்குப் பிறகு சந்தை வீழ்ந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனதளவு உங்களிடம் உள்ளதா? நீங்கள் 3 ஆண்டுகளுக்காக முதலீடு செய்கிறீர்களா அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக? என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பல முதலீட்டாளர்கள் தற்போது "ஹைப்ரிட்" (Hybrid) முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது, ஒரு பகுதி பணத்தை முறையாக முதலீடு செய்து, மீதமுள்ள தொகையை சில மாதங்களில் SIP மூலமாக முதலீடு செய்கிறார்கள். இது இரண்டு நன்மைகளையும் வழங்குகிறது. முன்னதாக முதலீடு செய்ததால் லாபம் விரைவில் தொடங்கும். தொடர்ச்சியாக முதலீடு செய்வதால் சந்தை ஆபத்துகள் சீரமைக்கப்படும். உங்கள் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும் முன், அனைத்து அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். உங்கள் பணநிலை, இலக்குகள் மற்றும் மனப்பான்மையைப் பொருத்தே முடிவெடுக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+