தனியார்மயத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.. 44% பேர் பச்சை கொடி.. மூட் ஆப் தி நேஷன் சர்வே ஷாக்கிங் முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமீப காலமாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்கவும், பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு நிறுவனங்களை தனியார்மாக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

இதற்காக ஏற்கனவே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் கருத்து கணிப்பில் 44% பேர் தனியார்மயத்தினை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளாதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இதே தனியார்மயம் வேண்டாம் என 39% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

தனியார்மய நடவடிக்கைக்கு ஆதரவு
 

தனியார்மய நடவடிக்கைக்கு ஆதரவு

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது நட்டில் நிலவி மந்த நிலையை போக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் பல நடவடிக்கைகள் சாதகமாக இருந்தாலும், பலர் அரசு நிறுவனங்கள் தனியார்மயத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு எதிராக இந்தியா டுடே நடத்திய சர்வேயில் 44% பேர் தனியார்மயத்துக்கு ஆதாரவாக உள்ளதாகவும் கணிப்பில் வெளியாகியுள்ளது.

39% பேர் எதிர்ப்பு

39% பேர் எதிர்ப்பு

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவைத் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், இது நல்ல ஒரு திட்டமா, அல்லது மோசமான திட்டமா? எதுவும் சொல்வதற்கில்லை என்ற இந்த கருத்து கணிப்பில், 44% இது ஒரு நல்ல திட்டம் எனவும், 39% பேர் இது மோசமான திட்டம் எனவும் கூறியுள்ளனர். இதே 17% பேர் எதுவும் சொல்வதற்கில்லை எனவும் கூறியுள்ளனர்.

எதற்காக இந்த தனியார்மயம்

எதற்காக இந்த தனியார்மயம்

மத்திய அரசின் இந்த தனியார்மய நடவடிக்கையை எதிர்க்கும் மக்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்குவதன் அவசியம் தான் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனராம். மேலும் இதை அவர்கள் ஓரு மோசமான நடவடிக்கையாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனராம். இதே இதை ஆதரித்தவர்கள் மேம்பட்ட தொழில் முறை, மேம்பட்ட தொழில் நுட்பங்கள், புதிய உலகளாவிய சந்தைகள், பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய சந்தை உருவாகும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளதாகவும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

தனியார்மயத்திற்கு அனுமதி
 

தனியார்மயத்திற்கு அனுமதி

கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அமைச்சரவை பிபிசிஎல் உள்பட ஐந்து மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் பிபிசிஎல் தவிர, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, டிஹெஸ்டிசி இந்தியா அன்ட் நீப்கோ எனப்படும் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

முதலீட்டு இலக்கு

முதலீட்டு இலக்கு

இவ்வாறு அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியாவின் முழு பங்கினையினையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக சமீபத்தில், Expression of Interest அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mood of the Nation poll said 44% peoples support modi govt’s privatisation policy

Mood of the Nation poll said 44% peoples support modi govt’s government proposal to privatize public sector undertakings including BPCL, Air india, etc..39% of peoples said it as a Bad move.
Story first published: Friday, January 24, 2020, 13:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X