டெல்லி: இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் நடத்திய கணக்கெடுப்பில், மொத்தம் பதிலளித்தவர்களில் 62% பேர் வெங்காயம் மற்றும் பிற உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது, இந்திய பொருளாதாத்தின் மிக மோசமான நிலையின் குறிகாட்டிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் மற்ற 28% பேர் வேறு விதமாக உணர்ந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூட் ஆப் தி நேஷன் சர்வே என்ற இந்த கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 12,141 பேரிடம் நடத்தப்பட்டதாக இந்தியா டுடே சர்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விலையேற்றத்தை சுட்டிக் காட்டும் பணவீக்கம்
நாட்டின் சில்லறை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளன. இது இந்தியாவில் நிலவி வரும் அதிகப்படியான விலையேற்றத்தினையே சுட்டிக் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களின் பணவீக்கம் தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.
பணவீக்கம் அதிகரிப்பு
இதே நுகர்வோர் விலை குறியீடு என்னும் சிபிஐ கிட்டதட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35% அதிகரித்துள்ளது. இதே மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதத்தில் இல்லாத அளவுக்கு 2.59% அதிகரித்துள்ளது. இந்த அதிகளவிலான பணவீக்க விகிதமானது வெங்காய விலையால் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் அவை டிசம்பரில் 455% உயர்ந்துள்ளன. இதே மற்ற காய்கறின் விலை 70% உயர்ந்துள்ளது.
வெங்காயம் விலை
கடந்த டிசம்பர் மாதத்தில் சுமார் 160 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை, தற்போது கிலோவுக்கு 60 - 70 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறது. மேலும் முந்தைய ஆண்டில் பயிர் செய்யப்பட்ட புதிய வெங்காயங்கள் தற்போது தான் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. இது ஜனவரி முதல் மே வரையில் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் மாதங்களில் விலை கட்டுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதிக்கு தடை
இந்த நிலையில் தற்போது தான் உள்நாட்டு சந்தையில் வெங்காயம் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதை பரீசிலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் பொருட்கள் இருப்பையும், கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், உயரும் விலையை கட்டு்குள் கொண்டு வரவும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதை, அரசு ஏற்றுமதியை தடை செய்தது.
வெள்ளத்தால் பாதிப்பு
மேலும் மஹாராஷ்டிரா போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், வெங்காயம் உற்பத்தி வீழ்ச்சி கண்டது. இதனால் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படும் வெங்காயம் சப்ளை குறைந்தது. இதனால் டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளில் வெங்காயம் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. சொல்லப்போனால் அந்த சமயத்தில் 200 ரூபாய் வரை கூட சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இப்படி ஒரு மோசமான பணவீக்கத்தை நாடு எதிர்கொண்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications