சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்தியாவின் சவ்ரின் ரேட்டிங்-ஐ Baa3 ஆக கொடுத்து, பொருளாதாரத்தின மீது உறுதியான கண்ணோட்டத்துடன், தொடர்ந்து பொருளாதாரம் வளர்ச்சி காரணமாக மக்களின் வருமான அளவுகள் படிப்படியான அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இது இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு முக்கியமாக பங்களிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மாத துவக்கத்தில் உலகின் முன்னணி கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான பின்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA அளவில் இருந்து AA+ ரேட்டிங் உடன் ஸ்டேபிள் அவுட்லுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்ற அனைத்து G20 பொருளாதார நாடுகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மூடிஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Moody's Investors Service இன்று இந்திய அரசின் நீண்ட கால அடிப்படையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய மதிப்பீடுகள் மற்றும் உள்ளூர் நாணய மூத்த பாதுகாப்பற்ற மதிப்பீட்டை Baa3 ஆக உறுதிப்படுத்தியது. மேலும் மூடிஸ் அமைப்பு இந்தியாவின் மற்ற குறுகிய கால உள்ளூர் நாணய மதிப்பீட்டை P-3 இல் உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.
Baa3 என்பது குறைந்த முதலீட்டு தர மதிப்பீடு ஆகும். ஃபிட்ச், எஸ்&பி மற்றும் மூடிஸ் ஆகிய மூன்று உலகளாவிய ரேட்டிங் ஏஜென்சிகளும் இந்திய பொருளாதாரத்தின் மீது நிலையான கண்ணோட்டத்துடன், குறைந்த முதலீட்டு தர மதிப்பீட்டான Baa3 கொடுத்துள்ளது.

இந்த மதிப்பீடுகள் மிகவும் முக்கியம், காரணம் முதலீட்டாளர்கள் ஒரு நாட்டின் முதலீடு செய்யும் முன்பு அதன் கடன் தகுதியினை தீர்மானிக்க காணப்படும் முக்கிய அளவுகோள் ஆக இந்த கிரெடிட் ரேட்டிங் உள்ளது. மேலும் இந்த கிரெடிட் ரேட்டிங் அடிப்படையில் தான் ஒரு நாடு கடன் வாங்கும் போது அதற்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கிரெடிட் ரேட்டிங் என்பது உலக நாடுகளுக்கான ஒரு காற்றழுத்தமானியாக பார்க்கப்படுகின்றன மற்றும் கடன் வாங்கும் செலவுகளை பாதிக்கின்றன.
கடந்த 7-10 ஆண்டுகளில் இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி அளவுகளில் குறைந்திருந்தாலும், சர்வதேச தரத்தின்படி இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடையும் என்று மூடிஸ் அறிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications