சீனாவின் அடிமடியிலேயே கைவைக்கும் கொரோனா வைரஸ்.. எப்படி தெரியுமா..!

Recommended Video

திடீர் வேகமெடுத்தது கொரோனா... பலி எண்ணிக்கையும் உயர்ந்தது | Coronavirus beats Sars in China

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20,000 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்கம் உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா அரசு மிகவும் போராடி வருகிறது என்றே கூறலாம்.

இது ஒரு புறம் எனில், மறுபுறம் சீனாவையும் தாண்டி தற்போது மற்ற நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் பரவ ஆரம்பித்துள்ளது.

வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே அமெரிக்கா சீனா வர்த்தக போரால் துவண்டு போன சீன பொருளாதாரம் தற்போது தான் சற்று மீள ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் கொடூர தாக்குதலால் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.

பங்கு சந்தை வீழ்ச்சி

பங்கு சந்தை வீழ்ச்சி

சொல்லப்போனால் கடந்த திங்கட்கிழமையன்று இதை எதிரொலிக்கும் விதமாக, ஒரே நாளில் ஷாங்காய் பங்குச்சந்தை குறியீட்டு எண் கிட்டதட்ட 8% வீழ்ச்சி கண்டது. இது கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி என்றும் கருதப்படுகிறது. அந்தளவுக்கு வீழ்ச்சி கண்டது.

இந்த துறைகள் எல்லாம் பாதிக்கப்படலாம்

இந்த துறைகள் எல்லாம் பாதிக்கப்படலாம்

கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனாவின் போக்குவரத்து, மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தகம், உற்பத்தித்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் பொழுது போக்கு, நிதித்துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மூடிஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் காலாண்டு ஜிடிபியில் இது 1% எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம்

பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம்

மூடிஸ் ஆய்வு நிறுவனத்தின், ஆசிய பசிபிக் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் கோக்ரேன் இது குறித்து கூறுகையில், மேற்கூடிய ஐந்து முக்கிய துறைகளிலும் நிச்சயம், கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இதன் விளைவாக சீனாவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு தாக்கத்தை இது ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறியுள்ளார்.

ஜிடிபி வீழ்ச்சி

ஜிடிபி வீழ்ச்சி

கடந்த மாதம் பெய்ஜிங் வெளியிட்ட அறிக்கையின் படி, சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2019ம் ஆண்டில் 6.1% தான் என்று அறிய முடிகிறது. மேலும் இந்த விகிதமான கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் நடப்பு காலாண்டிலும் சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக இந்த காலாண்டு ஜிடிபியில் 1% இந்த கொரோனா எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

கடன் நிலுவை அதிகரிப்பு

கடன் நிலுவை அதிகரிப்பு

இதில் மிக கவலை கொள்ளும் விஷயம் என்னவெனில், ஏற்கனவே கடன் நிலுவைத் தொகை அதிகமாக இருப்பதால், கடன் தரத்தின் எந்தவொரு கணிசமான இடையூறும் நிதித்துறையை மேலும் ஆபத்தில் தள்ளி விடும். இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடன் கொடுக்கும் அளவை பாதிக்கும். மேலும் கடன் வழங்குவதற்கான வேகத்தையும் குறைக்கும். மேலும் இது சீனாவின் பிற்பகுதி பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி பாதிப்பு

இன்றைய நிலவரப்படி பாதிப்பு

கொரோனாவின் தாக்கத்தால் இதுவரை 493 பேர் இறந்துள்ளதாகவும், 24,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே போல பிலிபைன்ஸ் மற்றும் ஹாங்காங்கிலும் ஒருவர் இறந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த வைரஸ் தாக்கத்தால் சீனா அமெரிக்கா என மற்ற நாடுகளும் பாதிக்க கூடும். ஆனால் சீனா போல அதிகளவில் பாதிக்காது.

வீழ்ச்சி உறுதி

வீழ்ச்சி உறுதி

சீனா பொருளாதாரத்தில் உற்பத்தி என்பது மிகப்பெரிய ஆயுதமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% ஆகும். உற்பத்தியில் பெரும் பகுதி வாகனத்துறையில் குவிந்துள்ளது. இந்த நிலையில் வுகான் மாநகரில் அமைந்துள்ள ஐந்து பெரிய வாகன உற்பத்தியாளர்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளனர். மேலும் ஷாங்காயில் அமைந்துள்ள 6 நிறுவனங்களும் பிப்ரவரி 9க்குள் மூட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி எனினும் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும் என்றால் கூட, உற்பத்தி 15% வீழ்ச்சி காணும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சீனா வங்கிகள் நடவடிக்கை

சீனா வங்கிகள் நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையிலும் கூட, கொரோனாவின் தாக்கத்தால் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வருகிறது. இதனால் சிக்கலில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், குறுகிய கால வட்டி வீதத்தை குறைப்பதாக சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா சில நாட்களுக்கு முன்பே அறிவித்தது.

நிச்சயம் தாக்கம் இருக்கும்

நிச்சயம் தாக்கம் இருக்கும்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிகழ்ந்து வந்த வர்த்தகப் போரை தொடர்ந்து, சமீப மாதங்களாக சீனாவின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவி வரும் சூழ்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஆட்டம் கண்டுள்ளது சீனப் பொருளாதாரம். கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடு பகுதியளவோ அல்லது முழுவதுமாகவோ நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கம் நீண்டகாலத்திற்கு தொடரும் பட்சத்தில் அது சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+