இனி தாங்காது.. ஒரே நேரத்தில் 7 அதானி நிறுவனத்திற்கு செக்.. முடிச்சு விட்டீங்க போங்க..!

அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் வழக்கை அர்த்தமற்றது, குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல என்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் சில மூத்த நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்த நிலையிலும், பல நாடுகள், பல மாநில அரசுகள், பல ரேட்டிங் அமைப்புகள் அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளனர்.

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னணி சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் மதிப்பீட்டை 'Stable' நிலையில் இருந்து 'Negative' ஆக மாற்றியுள்ளது. இந்த ரேட்டிங் மாற்றமும் மூலம் பன்னாட்டு முதலீடுகள் வருவது குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இனி தாங்காது.. ஒரே நேரத்தில் 7 அதானி நிறுவனத்திற்கு செக்.. முடிச்சு விட்டீங்க போங்க..!

அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ) மற்றும் அதானி இன்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல் ஆகிய ஏழு அதானி குழும நிறுவனங்களின் மதிப்பீட்டை மூடிஸ் குறைத்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் வழக்குகளின் விளைவாக அதானி குழுமத்தின் நிதி திரட்டும் திறன் மற்றும் ஒட்டுமொத்த நிதி நிலைமை பாதிக்கப்படலாம் என்று மூடிஸ் கவலை தெரிவித்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவிலான நிர்வாக பிரச்சினைகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.

மூடிஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனமும் அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் மதிப்பீட்டை குறைத்துள்ளது. ரேட்டிங் குறைந்த காரணத்தால் அதானி குழுமத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நிதி திரட்டும் திறனில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்க குற்றவியல் துறை வழக்குத் தொடர்ந்த 24 மணி நேரத்தில், கென்யா அரசு அதானி குழுமத்துடன் செய்து கொண்டிருந்த இரண்டு முக்கிய திட்டங்களை ரத்து செய்தது. இந்த நடவடிக்கை, அதானி குழுமத்தின் சர்வதேச விரிவாக்கத் திட்டங்களுக்கு பெரும் அடியாக அமைந்தது.

இந்த சம்பவம், அதானி குழுமம் செயல்படும் பிற நாடுகளில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மற்றும் கென்யாவின் நடவடிக்கைகள், அதானி குழுமத்தின் வணிக நற்பெயருக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், இந்தியாவிலும் அதானி குழுமத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதானி குழுமத்தின் மீது 2100 கோடி ரூபாய் மதிப்பிலான லஞ்ச வழக்கு தொடர்பாக, ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆந்திராவின் அண்டை மாநிலமான தெலங்கானா அரசு, அதானி குழுமத்திற்கு வழங்கிய 100 கோடி ரூபாய் நன்கொடையை திருப்பி அளித்துள்ளது.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி, அதானி குழுமம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 100 கோடி ரூபாய் காசோலையை வழங்கியிருந்தது. இந்த தொகை, யங் இந்திய ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னர், தெலங்கானா அரசு இந்த நன்கொடையை திருப்பி அளித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+