சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ் tamil, அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்கிற்கு அடுத்தப்படியாக திவாலான சிக்னேச்சர் வங்கி மீதான டெபிட் ரேட்டிங்-ஐ மோசமான மதிப்பீடான C என அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இனி இந்த வங்கிக்கு எவ்விதமான ரேட்டிங்-ம் அளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு நிற்காமல் சுமார் 6 அமெரிக்க வங்கியின் ரேட்டிங்க்-ஐ குறைக்க ஆய்வுக்கு வைத்துள்ளது மூடிஸ் tamil, இது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிக்கான் வேலி பேங்கிற்கு அரசின் உதவி மூலம் பெரும் சரிவு தடுக்கப்பட்டது. ஆனால் இந்த 6 வங்கிகளின் ரேட்டிங்-ஐ குறைத்தால் அமெரிக்க நிதியியல் சந்தை ஆட்டம் கண்டுவிடும்.
மூடிஸ் பொதுவாக ஒரு நிறுவனத்தின் நிதி நிலையை அடிப்படையாக கொண்டு பல முக்கியமான காரணிகளை ஆய்வு செய்து டெபிட் ரேட்டிங் கொடுக்கும். இந்த ரேட்டிங் அனைத்து முதலீட்டாளர்கள், நிதி சேவை அளிப்பவர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர். இந்த நிலையில் 6 அமெரிக்க வங்கிகளின் ரேட்டிங்-ஐ குறைக்க மறுஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மூடிஸ் அமைப்பு
மூடிஸ் அமைப்பு அமெரிக்காவில் திவாலான சிக்னேச்சர் வங்கி மீதான டெபிட் ரேட்டிங்-ஐ மோசமான மதிப்பீடான C என அறிவித்துள்ளதை தொடர்ந்து First Republic Bank, Zions Bancorporation, Western Alliance Bancorp, Comerica Inc, UMB Financial Corp, Intrust Financial Corporation ஆகிய 6 வங்கிகளின் ரேட்டிங்-ஐ குறைக்க மறுஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
சிக்னேச்சர் வங்கி
அமெரிக்க வரலாற்றில் 3வது பெரிய வங்கி திவாலாக கருதப்படும் சிக்னேச்சர் வங்கியை திவாலானதாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்புகள் தெரிவித்தது. இது சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவித்து வெறும் 48 மணிநேரத்திற்குள் வெளியானதால் பெரும் அதிர்ச்சி நிலவியது.
அமெரிக்க அரசு உதவி
சிலிக்கான் வேலி வங்கி வீழ்ச்சியின் தாக்கம் மிகவும் பெரியது, என்பதால் பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்பு அமெரிக்க அரசு அனைத்து SVB டெபாசிட் கணக்குகளின் பணத்தை முழுமையாக அணுக அனுமதி அளித்துள்ளது மட்டும் அல்லாமல் அவசர நிதிக்கு அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
பணம் கிடைத்தது
இந்த அறிவிப்புகள் மூலம் திங்கட்கிழமை முதலே சிலிக்கான் வேலி வங்கி-யின் அனைத்து டெபாசிட் கணக்கின் உரிமையாளர்களும் தங்களின் பணத்தை மொத்தமாக திரும்ப பெற்றனர். இதனால் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் எகோசிஸ்டமும் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது என்றால் மிகையில்லை.
HSBC - பிரிட்டன்
இதே நேரத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் HSBC, அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் துணை நிறுவனத்தை வெறும் 1 பவுண்டுக்கு வாங்குவதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் SVB வங்கி கணக்குகளின் பணமும் பாதுகாக்கப்பட்டது. பிரிட்டனில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு முக்கிய கடன் வழங்கும் நிறுனமாக விளங்கி வருகிறது சிலிக்கான் வேலி வங்கி.
சிலிக்கான் வேலி வங்கி திவால்
சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில், இவ்வங்கியின் நிர்வாகம், நிதி ஆதாரங்கள், சொத்துக்கள் அனைத்தையும் அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation வெள்ளிக்கிழமை கையில் எடுத்தது. இதன் உயர்மட்ட நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது.
FDIC அமைப்பு
இதற்காக FDIC அமைப்பு திங்கட்கிழமை Fannie Mae என்னும் அமெரிக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கடன் சேவை அமைப்பின் முன்னாள் தலைவரான Tim Mayopoulos-ஐ சிஇஓ-வாக நியமிப்பதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து திங்கட்கிழமை Tim Mayopoulos சிலிக்கான் வேலி வங்கி இயல்பாக இயங்கி வருகிறது என லின்கிடுன் தளத்தில் பதிவிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications