மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் அதானி குழுமங்களின் 4 முக்கிய நிறுவனங்கள் மீதான பார்வையை நிலையானது (stable) என்பதில் இருந்து, எதிர்மறை (negative) ஆக மாற்றியுள்ளது.
அதே நேரத்தில் மற்ற 4 குழு நிறுவனங்காளின் கண்ணோட்டத்தினை நிலையானது (stable) என்றே வைத்துள்ளது.
எப்படியிருப்பினும் 8 அதானி குழும நிறுவனங்களின் மதிப்பீடுகளை அது பராமரித்துள்ளது.
ஸ்டேபிள் குறியீடு
அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை உள்ளிட்ட 4 நிறுவனங்களின் கண்ணோட்டத்தை நிலையானது என்றதில் இருந்து எதிர்மறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன், அதானி இண்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல், அதானி கிரீன் எனர்ஜி ரெஸ்ட்ரிக் குழுமம், அதானி டிரான்ஸ்மிஷன் ரெஸ்ட்ரிக் குழுமம் 1 உள்ளிட்ட 4 நிறுவனங்களும் ஸ்டேபிள் என்ற குழுமத்தில் உள்ளன.
அதானி கிரீன் எனர்ஜி
மூடிஸ் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் அவுட்லுக்கினை ஸ்டேபிள் என்ற குறியீட்டில் இருந்து, நெகட்டிவ் என்று தரமிறக்கியுள்ளது. அதே நேரத்தில் அதன் மதிப்பீட்டினை Ba3 என்ற குறியீட்டினை அப்படியே வைத்துள்ளது.
அதானி கீரின் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களால் இந்த மதிப்பீடானது தொடர்ந்து அப்படி பராமரிக்கப்படுகின்றது. இது அதன் பணப்புழக்கதை நீண்டகால நோக்கில் பிரதிபலிக்கலாம் என ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
நிதி தேவை
எனினும் அதானி கிரீன் எனர்ஜி மிகப்பெரிய மூலதன செலவுகள் மற்றும் முதலீட்டு திட்டங்களை சார்ந்துள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனம் கடனை திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் உள்ள நிலையில், அதானி குழுமத்திற்கு 2.7 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படும். இது நிறுவனத்தின் நிதி செலவினையும் அதிகரிக்க வழிவகுக்கும். நிறுவனத்தின் செயல்பாட்டினையும் குறைக்கும்.
அதானி கடன்
2024ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 500 மில்லியன் டாலர் கடனை நிறுவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. ஆக இது அதானி இதுவும் மேற்கொண்டு நிறுவனத்திற்கு எதிராக அமையலாம்.
இதே அதானி குழுமத்தின் மற்றொரு நிறுவனமான அதானி டிரான்ஸ்மிஷனால் மதிப்பிடப்பட்ட பத்திரங்கள் மற்றும் இயல்பு நிலை ஏற்பாடுகள், ஆகியவற்றின் மீது பெற்றோரின் உத்தரவாதத்தின் காரணமாக, அதன் முழு உரிமையாளரான அதானி டிரான்ஸ்மிஷனுடான நிறுவனத்தின் நெருங்கிய கடன் தொடர்பை பிரதிபலிக்கிறது.
சரியலாம்
மூடிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது மேற்கோண்டு அதானி குழும பங்குகளில் பிரதிபலிக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு அதானி குழும பங்குகள் சரிவடையலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது என ஹிண்டர்ன்பர்க் குற்றம் சாட்டியது.
சட்ட நடவடிக்கையா?
மேலும் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என கூறியது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டன. இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இனியேனும் கிரெடிட் நிறுவனங்கள் அதனதன் மதிப்பீடுகளை மாற்றியமைக்குமா? இனி என்னவாக போகிறது? பொறுத்திருந்து தானே பார்ப்போமே.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications