டெல்லி: 2019-ம் ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்த கணிப்பைக் குறைத்து இருக்கிறது மூடீஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம். மூடிஸ் நிறுவனம் இந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.6 சதவிகிதம் வளரலாம் எனக் கணித்து இருக்கிறது. இதற்கு முன் மூடிஸ் நிறுவனத்தின் கணிப்பு 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்துச் சொல்லும் போது, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் நிலவும் மந்த நிலை, எதிர்பார்த்ததை விட அதிக காலம் நீடித்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது மூடிஸ். கடந்த 2018-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 2020-ம் ஆண்டில் இருந்து, இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்து ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாக அதிகரிக்கும் எனவும் சொல்லி இருக்கிறது மூடிஸ். அதே போல 2021-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு தான், இந்தியாவுக்கான மதிப்பீட்டை ஸ்டேபிள் என்கிற மதிப்பீட்டில் இருந்து நெகட்டிவ் மதிப்பீட்டுக்கு மூடிஸ் மாற்றியது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்தியாவின் 21 முன்னணி நிறுவனங்களுக்கான மதிப்பீட்டையும் குறைத்து இந்திய சந்தையில் ஒரு அணு குண்டைப் போட்டது நினைவு கூறத்தக்கது. இந்த 21 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச் டி எஃப் சி வங்கி, எஸ்பிஐ போன்ற பெரிய பெரிய நிதி நிறுவனங்களும் அடக்கம்.
மூடிஸ் நிறுவனம் சொல்வதற்கு முன்பே... இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2019 - 20 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கலாம் எனவும் கணித்திருக்கிறது. எஸ்பிஐ தன்னுடைய முந்தைய கணிப்பில் 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது 1.1 சதவிகிதம் ஜிடிபி கணிப்பை குறைத்து இருக்கிறது. ஆக நாளை சண்டை இந்த செய்திக்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications