மூடிஸ் சொன்ன செம விஷயம்.. ஜிடிபி வளர்ச்சி விகிதம் 12% அதிகரிக்கும்.. மற்ற கணிப்புகள் எப்படி?

டெல்லி: நடப்பு காலாண்டர் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 12% வளர்ச்சி காணலாம் என மூடிஸ் கணித்துள்ளது.

இந்த வளர்ச்சி விகிதமானது கடந்த நவம்பர் மாதத்தில் 9% ஆக வளர்ச்சி காணும் என மூடிஸ் கணித்திருந்தது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடான இந்தியாவில், தற்போது பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகளும் சற்று நேர்மறையாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

சாதகமான வளர்ச்சி

சாதகமான வளர்ச்சி

எனினும் இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட பரவலானது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இதன் தாக்கம் எப்படியிருக்குமோ? மீண்டு வரும் பொருளாதாரத்தில், இது தாக்கத்தினை ஏற்படுத்துமா என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக மூடிஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி இருப்பினும் இந்தியாவின் மீடியம் டெர்ம் வளர்ச்சியானது தற்போதைக்கு நேர்மறையாக உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

OECD-யின் கணிப்பு

OECD-யின் கணிப்பு

குறிப்பாக டிசம்பர் காலாண்டில் எதிர்பார்ப்பினை விட ஜிடிபி விகிதம் 0.4% ஆக வளர்ச்சி கண்டது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 7.5% ஆக வீழ்ச்சி கண்டது. இதற்கியிடையில் கடந்த வாரத்தில் OECD இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது அடுத்த 2022ம் நிதியாண்டில் 12.6% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது G20 நாடுகளில் அதிகம் என்றும் கூறப்பட்டது.

மூடி கணிப்பு

மூடி கணிப்பு

இதே மூடிஸ் ஆய்வாளர்கள் 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 13.7% வளர்ச்சி காணும் என்று கணித்திருந்தனர். இந்த நிலையில் நடப்பு காலாண்டர் ஆண்டில் 12% வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளனர். அதோடு தனியார் நுகர்வு என்பது அதிகரிக்கும். அதே போல அடுத்த சில காலாண்டுகளுக்கு அன்னிய முதலீடுகளும் அதிகமாக இருக்கும். உள்நாட்டு தேவையும் வலுவாக மீண்டு வந்து கொண்டுள்ளது.

இரண்டாம் கட்ட பரவல் அச்சம்

இரண்டாம் கட்ட பரவல் அச்சம்

தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்தான அச்சமும் உள்ளது. எனினும் இதில் கவனிக்கதக்க நல்ல செய்தி என்னவெனில் இரண்டாம் கட்ட பரவல் என்பது சில மாநிலங்களில் தான் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலைமை மோசமடைந்து விட்டால் மீண்டும் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு வழி வகுக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஆறுதல் தரும் தடுப்பூசி

ஆறுதல் தரும் தடுப்பூசி

எனினும் இப்படி ஒரு இக்கட்டான நிலையிலும் சற்றே ஆறுதல் கொடுக்கும் விஷயம் என்னவெனில, தடுப்பூசிகள் தான். ஆக இது சற்றே இப்பிரச்சனையில் இருந்து மக்களை தள்ளிவைக்கலாம். அதோடு பொருளாதாரத்த வளர்ச்சிக்கும் துணைபுரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 2022ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த தடுப்பூசிகள் அனைவருக்கும் போடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+