பயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை வளர்ச்சியால், மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் இந்தியாவிலுள்ள சில வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை குறைத்துள்ளது.

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் சில நிறுவனங்களின் தர குறியீட்டை "நிலையானது" (Stable) என்ற மதிப்பீட்டில் இருந்து குறைந்து "எதிர்மறை" (Negative) என்ற தரக்குறியீட்டை நிர்ணயித்து இருக்கிறது.

இதற்கு பொருளாதார வளர்ச்சி குறித்து மதிப்பீடுகள் திருப்திகரமாக இல்லாதது, மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மூடிஸ் தரக்குறீயீடு

மூடிஸ் தரக்குறீயீடு

மூடிஸ் நிறுவனத்தின் தற்போதைய எதிர்மறை தரக்குறீயீட்டுக்கு முன்னணி இந்திய வங்கிகளும், முன்னணி நிறுவனங்களும் இலக்காகி உள்ளன. குறிப்பாக பொதுத்துறை வங்கியில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, என்.டி.எஃப்.சி, எக்சிம் இந்தியா, ஹூரோ கார்ப், ஹட்கோ, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், கெயில், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த தரக்குறீயீட்டு பட்டியியலில் அடங்கும்.

இந்த நிறுவனங்கள் எல்லாம் அடங்கும்

இந்த நிறுவனங்கள் எல்லாம் அடங்கும்

இது தவிர தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் பார்வையையும் மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளது. ஆக மொத்தம் இந்த நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழன்மையன்று 21 இந்திய நிறுவனங்களின் தர மதிப்பினைக் குறைத்துள்ளது. இது தவிர எக்ஸிம் வங்கி, ஹீரோ ஃபின்கார்ப், ஹட்கோ மற்றும் இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனும் இதில் அடங்கும்.

நிதி நிறுவனங்களில் மாற்றம் இருக்காது
 

நிதி நிறுவனங்களில் மாற்றம் இருக்காது

இருப்பினும் இந்த தரக்குறியீட்டு நிறுவனம் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்,, சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் மதிப்பினைக் குறைக்கவில்லை. மேலும் மேற்கூறிய நிதி நிறுவனங்களின் மதிப்பீடுகளில் அடுத்த 12 -18 மாதங்களில் மேம்படுத்தபட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பாதிப்பு

எண்ணெய் நிறுவனங்கள் பாதிப்பு

மேலும் எட்டு நிதி சாரா நிறுவனங்களின் பார்வையை நிலையானது என்ற பார்வையிலிருந்து எதிர்மறையாக குறைத்துள்ளது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஓ.என்.ஜி.சி, பெட்ரோனேட் எல்.என்.ஜி, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பை எதிர்மறையாக்கியுள்ளது.

பயமுறுத்தும் அறிக்கை

பயமுறுத்தும் அறிக்கை

மேலும் இது பல உள்கட்டமைப்பு நிறுவனங்களின் தரக்குறியீட்டையும் குறைத்துள்ளது. குறிப்பாக என்.டி.பி.சி, என்.ஹெச்.பி.சி, என்.ஹெச்.ஏ.ஐ, கெயில், பவர் கிரிட், அதானி கீரின் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். இது போன்ற பல பயமுறுத்தும் அறிக்கைகள் அறிக்கைகள் வந்தாலும், அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கையினால், அதற்கான பலன்கள் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi hdfc bank எஸ்பிஐ
English summary

Moody’s investors services outlook on downgrades of SBI, BPCL and some others

Moody’s investors services outlook on downgrades of SBI, BPCL, oil and Gas sector companies, IT companies and private banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X