பாகிஸ்தான் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் பொருளாதார ரீதியாக பெரிய அளவிலான பாதிப்புகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது .
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா ராஜாங்க ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லையில் போர் பதற்றமும் உண்டாகி இருக்கிறது. மே 7ஆம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகையும் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தான இடையே போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்புகளை சந்திக்கும் என மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் வெளியிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் பெரிய அளவில் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு கிடையாது, போர் ஏற்பட்டால் கையில் இருக்கும் பணத்தையும் இழந்து எந்த ஒரு கடனையும் திரும்ப செலுத்த முடியாத சூழலுக்கு பாகிஸ்தான் செல்லும் என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவிகளை நிறுத்தும் , மேற்கொண்டு எந்த ஒரு அமைப்பும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதற்கு முன் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது . சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் உதவிகளை வழங்கும் போது பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை பின்பற்றியதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் லேசாக மீள தொடங்கியது. பணவீக்கம் சற்றே குறைந்தது. ஆனால் தற்போது இந்தியா பாகிஸ்தான இடையில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த போர் பதற்றம் பாகிஸ்தானை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது என மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அதே வேளையில் இந்தியா வலுவான ஒரு பொருளாதரமாக வேகமான பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி சீராக இருக்கிறது என்றும் உள்நாட்டு சந்தையில் மக்கள் செலவினங்களை அதிகரிக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. பாகிஸ்தானுடன் பெரிய அளவில் வர்த்தக உறவு இல்லை என்பதால் இந்த போரினால் இந்தியாவிற்கு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு இருக்காது என்றும் மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை எல்லையில் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபடக்கூடிய சூழல் வந்தால் இந்தியா ராணுவத்திற்கான செலவினத்தை அதிகரிக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாகவே இருக்கும் என கூறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications