ஆசிய பசிபிக் பிராந்திய மூடிஸ் அமைப்பின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் காக்ரேன் கூறுகையில், இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பிற முக்கிய நாடுகளில், நடப்பு ஆண்டினை விட 2023ம் ஆண்டில் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
இது கொரோனா பிரச்சனை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிலவி வரும் மந்த நிலை குறித்தான அச்சம், சீனாவின் மந்த நிலை ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம் என்றும் கணித்துள்ளது.
ஐஎம்எஃப்-ன் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் 6% ஆக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 3.2% ஆக சரிவடையலாம். இது அடுத்த ஆண்டில் இன்னும் குறைந்து, 2.7% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலக நாடுகளில் மந்த நிலையை எதிர்கொண்டாலும், இந்தியாவில் அந்தளவுக்கு மோசம் இருக்காது என ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியாவில் தாக்க இருக்கலாம்
இதற்கிடையில் தற்போது மூடிஸ் அமைப்பும் சர்வதேச நாடுகள் மந்த நிலையை எதிர்கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவும் சர்வதேச நாடுகளின் எதிரொலியாக மெதுவான வளர்ச்சியினை காணலாம். இதன் காரணமாக இந்தியாவிலும் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.
பணவீக்கம்
இந்தியாவில் முதலீடானது அதிகரித்துள்ளது. இதற்கிடையில் உற்பத்தி திறன் ஆனது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் டெக்னாலஜி மற்றும் விவசாய துறையானது மேம்பட்டுள்ளது. எனினும் தற்போது பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்படும் நிலையில், வளர்ச்சி பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பணவீக்கம் என்பது 6% மேலாக காணப்படுகின்றது. இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
மூடிஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2022ம் ஆண்டில் 8% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இதே 2023ம் ஆண்டில் 5% ஆக வளர்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021ல் 8.5% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியில் தாக்கம்
சீனாவில் நிலவி மந்த நிலைக்கு மத்தியில், இந்தியாவின் ஏற்றுமதி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கோண்டு இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வளர்ச்சியில் தாக்கம் இருக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் இன்னும் வளர்ச்சியில் பாதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications