இந்திய வங்கிகளின் தரம் குறித்து சர்வதேச தர நிர்ணய அமைப்பு, இந்திய வங்கிகளின் தரத்தை நெகட்டிவ் என்ற நிலையிலிருந்து, ஒரு படி அதிகரித்து ஸ்டேபிள் என்று உயர்த்தியுள்ளது.
இதற்கு மூடிஸ் நிறுவனம் வங்கிகளிடம் சொத்து தரமானது கொரோனாவிற்கு பின்பு சற்றே அதிகரித்துள்ளது. இது வங்கிகளுக்கு ஊக்கத்தை அளிக்கலாம் என்றும் இந்த தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது கடன்களுக்கான வட்டி விகிதமானது குறைந்துள்ள நிலையில், கடன் வளர்ச்சியானது அதிகரித்துள்ளதாகவும், இதனால் வங்கிகளின் லாபம் வீதமும் அதிகரித்து உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மூலதனம் அதிகரிப்பு
மேலும் தற்போது வங்கிகளின் மூலதனம் கொரோனாவிற்கு முந்தைய நிலையை எட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அடுத்த 12 - 18 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வரலாம் என்று மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 9.3% அதிகரிக்கலாம் என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 7.9% சதவிகிதமாக வளர்ச்சி கொள்ளலாம் என்று கணித்துள்ளது.
கடன் வளர்ச்சி
அதோடு தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றது. இதற்கிடையில் இந்த வருடத்தில் கடன் வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் 10 - 13% அதிகரிக்கலாம் என்று மூடிஷ் தெரிவித்துள்ளது.
வங்கிகள் வளர்ச்சி விகிதம்
முன்னதாக பலவீனமான கார்ப்பரேட் நிதி மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பலவும், வங்கிகளுக்கும் எதிர்மறையான காரணிகளாக இருந்தாலும், தற்போது இந்த பிரச்சினைகள் விலகியுள்ளன. இந்த நிலையில் வங்கிகளின் வளர்ச்சி விகிதமானது உயர்ந்துள்ளதாக மூடிஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் சரிவு
கொரோனா காலத்தில் தொற்றுநோய் விகிதமானது மிக அதிக அளவில் இருந்த நிலையில், வங்கிகளின் வாரக்கடன் விகிதம் மோசமான சரிவினைக் கண்டிருந்தது. அந்த சமயத்தில் வாராக்கடன் விகிதமும் மிக மோசமாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில் சொத்தின் தரமானது அந்த சமயத்தில் மிக மோசமான சரிவை கண்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு ஆதரவு
தற்போது பெரும் நிறுவனங்களின் நிதி தரமும் மேம்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் லாப விகிதம் அதிகரித்து வரும் நிலையில், கடன் வளர்ச்சியும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு தனது ஆதரவை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கியின் செயல்பாடுகள் மேலும் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்
இந்த நிலையில் தான் வங்கிகளின் தரமும் அதிகரித்துள்ளது. இந்திய வங்கிகளின் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் உலகில் உள்ள மிகச்சிறந்த வங்கி நியதிகளுடன் ஒப்பிடக் கூடியவை என ஸ்டேண்டர்டு அண்டு பூர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்திய வங்கிகள் தற்போது வளர்ச்சி பாதை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், வங்கிகளின் வளர்ச்சியும் மேம்படலாம்.


Click it and Unblock the Notifications