உலகின் முன்னணி ரேட்டிங் நிறுவனமான மூடிஸ், 2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மீதான தனது கணிப்பை 6.1 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் போது, டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மிகவும் முக்கியமான விஷயமாக விளங்குகிறது. இதனால் பல முக்கிய முதலீடுகள் இந்தியச் சந்தைக்குத் திரும்புகிறது, இத்தகைய சூழ்நிலையில் மூடிஸ் அமைப்பின் கணிப்பு புதிய உந்துசக்தியாக உள்ளது.

டிசம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான சந்தை மதிப்பீடுகளைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சி மீதான தனது கணிப்பை 6.1 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது மூடிஸ் அமைப்பு.
இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 1.5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து சுமார் 8.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பொருளாதார வல்லுநர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்ட 6.6 சதவீதத்தை விட மிகவும் வேகமானதாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மறைமுக வரிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை நீக்கிவிட்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பைக் குறிக்கும் மொத்த மதிப்பு கூட்டு (GVA) அளவு 6.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த வேறுபாடு 10 ஆண்டுகளில் அதிக அளவில் உள்ளது என்று ஆக்சிஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் நீலகந்த் மிஸ்ரா கூறினார், இதேபோல் இந்த நிலை தொடரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிய அவர், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 6.5% வளரும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் GDP வளர்ச்சி மார்ச் 31, 2024 இல் முடிவடையும் ஆண்டில் 7.6% என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதேவேளையில் அடுத்த சில வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் மூடிஸ் அமைப்பின் இத்தகைய அறிவிப்பு பெரும் நம்பிக்கையை நாட்டின் பொருளாதாரத்தின் மீது கொடுத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications