இந்திய ஜிடிபி வளர்ச்சி.. மீண்டும் கணிப்பை மாற்றிய மூடீஸ்..!

சர்வதேச அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியினை கண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரத்திலும் அதன் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் மூடீஸ் ஆய்வு நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பினை திருத்தியமைத்துள்ளது.

மூடீஸ் நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்தான மதிப்பீட்டினை நடப்பு ஆண்டில் 7.7%ல் இருந்து, 7% ஆக மாற்றியமைத்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

இது சர்வதேச பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்த திருத்தம் வந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது உச்சம் தொட்டு வரும் நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

2வது முறை குறைப்பு

2வது முறை குறைப்பு

இது மேற்கொண்டு பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூடீஸ் நிறுவனத்தின் இந்த திருத்தம் இரண்டாவது முறையாக செய்யப்பட்டுள்ளது. இது முன்னதாக கடந்த மே மாதத்தில் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8.8% ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இது பின்னர் 7.77% ஆக குறைக்கப்பட்டது. இந்த விகிதமானது தற்போது மீண்டும் 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உச்சத்தில் பணவீக்கம்

உச்சத்தில் பணவீக்கம்

தொடர்ச்சியாக உச்சத்தில் இருந்து வரும் பணவீக்கம் என்பது அதிகளவில் உள்ள நிலையில், இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த நிதியாண்டிலும் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சி?

அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சி?

மூடீஸ் கணிப்பில் 2023ல் 4.8% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள பொருளாதாரம், 2024ல் 6.4% என்ற லெவலில் இருக்கலாம் என கணித்துள்ளது.

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் நிதி பற்றாக்குறை இருந்து வருகின்றது. சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் என்பது மேற்கொண்டு உலக நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது சப்ளை சங்கிலியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மேற்கோண்டு ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்கம்

தாக்கம்

இதனால் அடுத்தாண்டிலும் வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ல் மட்டும் அல்ல, 2024ம் ஆண்டிலும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என தெரிகிறது.

பணவீக்கத்தின் தாக்கம்

பணவீக்கத்தின் தாக்கம்

இந்தியாவினை பொறுத்த வரையில் ஏற்றுமதியினை விட, இறக்குமதியினை அதிகம் செய்து வருகின்றது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டி வருகின்றது, இதன் காரணமாக தொடர்ந்து இந்தியாவில் பணவீக்கம் என்பது உச்சத்தில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி குழுவானது கடந்த மே மாதம் முதல், ரெப்போ விகிதம் 190 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த ரெப்போ விகிதமானது கொரோனாவுக்கு முந்தைய லெவலை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் 4வது முறையாக வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+