டெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவின் கடன் தரத்தினை குறைத்த மூடிஸ் நிறுவனம், சில வங்கிகளின் நீண்டகால வைப்பு தொகைக்கான மதிப்பினையும் குறைத்தது.
இந்த நிலையில் தற்போது சில்லறை மற்றும் சிறு வணிக கடன்களும் மோசமடையும் என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் மிகவும் பின்னடைவினை சந்தித்துள்ள பொருளாதாரத்தினால், பல நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீடித்த லாக்டவுனில் இருந்து தற்போது சற்று தளர்வு அளிக்கப்பட்டாலும் அது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், இந்தியாவின் நிதி அமைப்பிற்கு உள்ள அபாயங்கள் அதிகரித்து வருவதாக செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பே சில துறைகள் சிக்கலில் இருந்து வந்தன. இந்த நிலையில் NBFI-யின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் இரண்டுமே அழுத்ததிற்கு உள்ளாகலாம் என்றும், இது வங்கிக் கடன்களில் சுமார் 10 - 15 சதவீதமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
இதே தனியார் மின் துறை வெளிப்பாடு வங்கிக் கடன்களில் சுமார் 8 - 10 சதவீதமாகும். வாகன மதிப்பு சங்கிலியும் இதில் அதிகம் வெளிப்படும். இந்த நிலையில் இது சில்லறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர கடன்களின் தரமும் மோசமடையும் என்று அது கூறியுள்ளது. இது மொத்த கடன்களில் 44 சதவீதமாகும்.
இது குறைவான வளர்ச்சி, பலவீனமான நிதி நிலை, தற்போதுள்ள நிலையில் அதிகரித்து வரும் பல சவால்களை எதிர்கொள்கின்றன என்று மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது. ஆக இது நிதி அமைப்புகளுக்கு அபாயங்களை அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் 80 சதவீத நிறுவனங்களின் பிரச்சனையில் உள்ளதாகவும், அவற்றின் தரத்தினை பரிசீலனை செய்து வருவதாகவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
ஆக இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் மதிப்பு அதிகம். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பே இந்தியாவில் மந்த நிலையானது தெளிவாகத் தெரிந்தது. ஆக இது தற்போது இன்னும் மோசமடைந்துள்ளது. இது இன்னும் பின்னடைவை கொடுக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications