மும்பை: மூன்லைட்டிங் என்பது சமீபத்திய காலமாக பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஐடி துறையில் பெரும் சல சலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு விப்ரோவின் பணி நீக்க நடவடிக்கைக்கு பிறகு, மற்ற ஐடி நிறுவனங்களும் பிரச்சனைகளை கையில் எடுக்கலாம். கடுமையான நடவடிக்கையினை எடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வந்தது.
குறிப்பாக விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் மூன்லைட்டிங்கிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தாலும், டிசிஎஸ் தரப்பில் இருந்து எந்தவிதமான வெளிப்படும் பெரியளவில் இல்லாமல் இருந்து வந்தது.
டிசிஎஸ்-ன் கருத்து
இந்த நிலையில் தான் நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளரான டிசிஎஸ், மூன்லைட்டிங் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளது. இது ஒரு நெறிமுறை பிரச்சனை தான். ஆனால் டிசிஎஸ் இதுவரை ஊழியர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறியுள்ளது.
ஊழியர்கள் நிம்மதி
6 லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், டிசிஎஸ்-ன் மூன்லைட்டிங் குறித்தான அறிவிப்பானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பர்க்கப்பட்டது. இது குறித்து மற்ற நிறுவனங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் பெரும் நிம்மதியினை கொடுத்துள்ளது.
டிசிஎஸ் உயர் அதிகாரிகளின் கருத்து
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலந்த் லக்காட், மூன்லைட்டிங் செய்வது ஒரு நெறிமுறை பிரச்சனை. இது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.
இதே டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், ஊழியர்கள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது, வேறு நிறுவனத்தில் பணியாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இணைந்து செயல்பாடு
விப்ரோ எடுத்த பணி நீக்க நடவடிக்கை போல், டிசிஎஸ் அதன் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் லக்காட் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் தனது ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், அதன் ஊழியர்களுடன் அர்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் மூன்லைட்டிங் குறித்து வெவ்வேறு விதமாக கருத்துகளை கொண்டு இருந்தாலும், டிசிஎஸ் இதுவரையில் தனது வெளிப்படையான கருத்தினை முழுமையாக தெரிவிக்கவில்லை.
எப்படியிருப்பினும் தற்போது டிசிஎஸ்-ன் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் பெரும் நிம்மதியினை கொடுத்திருக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications