இந்திய ஐடி சேவை நிறுவனங்களை மிரட்டி வந்த இடமும் தெரியாமல், போன தடமும் தெரியாமல் மாயமாகியுள்ளளது. கொரோனா தொற்று காலத்தில் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் போதும் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் வேறு நிறுவனங்களில் ப்ரீலான்சிங் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவது வழக்கமாக இருந்தது.
இதை மூன்லைட்டிங் என பெரிய அளவில் இந்தியா முதல் உலக நாடுகள் வரையில் டிரெண்டானது. இத்தகைய முன்லைடிங் பிரச்சனை ஐடி சேவை துறையில் மட்டும் அல்லாமல் வீட்டில் இருந்து பணியாற்றக்கூடிய அனைத்து துறையிலும், பிரிவுகளிலும் இருந்தது.

இது இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு தகவல் கசிவு, முழு நேர பணியில் செயல்திறன் சரிவு, போட்டி நிறுவனங்களுக்கு பணியாற்றுதல் என பல பிரச்சனைகள் இதில் இருந்தது. இதனால் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எச்சரிக்க விடுத்தது மட்டும் அல்லாமல் பல ஊழியர்களை பணிநீக்கமும் செய்தது.
இதை சரி செய்ய வேண்டும் என திட்டமிட்டும், இதேநேரத்தில் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் சில பல முக்கிய முடிவுகளை எடுத்த நிலையில் தற்போது டெக் துறையில் முன்லைட்டிங் வந்த இடமும் தெரியாமல் சென்ற தடமும் தெரியாமல் மறைந்து போனது.
ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தக பாதிப்பும், கட்டாயம் வாரத்தில் 3 நாள் அலுவலகம் வர வேண்டும் என்ற முக்கிய உத்தரவுகள் மூலம் இந்திய டெக் சேவை துறையில் மூன்லைட்டிங் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் முழுமையாக மூன்லைட்டிங் குறைந்துள்ளதா என கூற முடியாது, ஆனால் 70 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சர்வதேச அளவில் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து பொருளாதார பிரச்சனையை காரணம் காட்டி, பல சிறிய, பெரிய நிறுவனங்கள் டெக் சேவைக்கு செய்யும் முதலீட்டை குறைத்துள்ளது. இதனால் சாப்ட்வேர் டெவலப்மென்ட்-ல் ப்ரீலான்சர் பணிகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. அப்படி குறைந்தாலும் சந்தையில் இருக்கும் ப்ரீலான்சர் பணிகளுக்கான கட்டணம் பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால் மூன்லைட்டிங் பிரச்சனை இந்திய ஐடி சேவை துறையில் மாயமாகி வருகிறது, 70 -80 சதவீதம் குறைந்த மூன்லைட்டிங் பல ஐடி நிறுவனங்கள் சம்பள உயர்வு அளிக்காத காரணத்தால் மீண்டும் உயரும் அச்சம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications