மூன்லைட்டிங் இந்த சொல் கொரோனா காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நிலையில், தற்போது கார்பரேட் உலகில் ஒன்றிப்போய் யாரும் இதுக்குறித்து பேசுவது கூட இல்லை என்றாலும் தொடர்ந்து ஊழியர்கள் மூன்லைட்டிங் செய்து தான் வருகிறார்கள்.
கொரோனா தொற்று காலத்தில் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றிய காரணத்தால் முழு நேர வேலைவாய்ப்பை தாண்டி, பலர் பார்ட்டைம் மற்றும் கான்டிராக்ட் முறையில் பல பணிகளை தற்காலிகமாக பணியாற்றி கூடுதலான வருமானத்தை பெற்று வந்தனர். பல இந்த ப்ரீலான்சிங் அல்லது பார்ட்டைம் பணி மூலம் சம்பளத்தை விடவும் அதிகமான வருமானத்தை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் வருமானவரித்துறை தற்போது பெரிய கண்காணிப்பு விலையை விரித்துள்ளது, மாத சம்பளக்காரர்கள் தங்களுடைய முழு நேர பணியில் இருந்து பெரும் சம்பளத்தை தாண்டி வெளியில் பெற்ற வருமானத்தை வருமான வரி அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டாமல் இருப்பதை கண்டுப்பிடித்து வருகிறது.
இந்த கூடுதல் வருமான குறித்து முழுமையாக வருமான வரி அறிக்கையில் தெரிவிக்காமல் ஏமாற்றியவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மூன்லைட்டிங் சம்பள விவகாரம் 2019-20, 2020-21 ஆம் நிதியாண்டுக்கு தொடர்புடையது என்பது தான், பழைய தரவுகளை வருமான வரித்துறை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது.
Moonlighting மூலம் மாத சம்பளக்காரர்கள் பெற்ற பணம் பெரும்பாலும் ஆன்லைன், வெளிநாட்டு கணக்குகள் வாயிலாக தான் என்பதால் வருமான வரித்துறை இதை எளிதாக கண்டறிய முடியும். இதேபோல் வருமான வரித்துறை தற்போது தனது டெக் சேவையை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளதால் மிகவும் எளிதாக இத்தகைய விஷயங்களை கண்டறிந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு தனிநபர் வருமான வரி அறிக்கையில் போலி வீட்டு வாடகை ரசீது, போலி நன்கொடை ரசீது ஆகியவற்றை கண்டறிந்து வருமான வரித்துறை பலருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்லைட்டிங் மூலம் கூடுதல் வருமானத்தை ஈர்த்த பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த முதற்கட்ட நோட்டீஸ்-ல் சராசரி மூன்லைட்டிங் வருமான அளவு 5 முதல் 10 லட்சம் ரூபாய். இதுவரையில் வருமான வரித்துறை மூன்லைட்டிங் வருமானம் தொடர்பாக சுமார் 1100 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications